ஐக்கிய நாடுகள் சபை (U.N.O)
இரண்டாம் உலகப் போர் பன்னாட்டு சங்கத்தின் தோல்வியை காட்டியது. ஐ.நா. சபை இரண்டாம் உலகப் போர் முடிவில் எற்பட்ட அழிவின் காரணமாக வருங்காலத்தில் போரை ஒழித்து பன்னாட்டு கூட்டுறவை வளர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதாகும். 1945, ஏப்ரலில் உலகத்தலைவர்கள் சான்பிரான்சிஸ்கோ மாநாட்டை கூட்டினர். இதில் 51 நாடுகளில் பிரதிநிதிகள் கூடினர். இம்மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை சாசனம் இறுதி செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24 ஆம் தேதி 51 உறுப்பினர்களோடு உதயமானது. கடைசியாக ஜூலை 2011 ல் தெற்கு சூடான் ஐ.நா. வின் உறுப்பினராக சேர்ந்தது. ஐ.நா வில் தற்பொழுது 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஐ.நா.வில் பொது சபை, பாதுபாகாப்பு சபை, பொருளாதார மற்றுமம் சமூக அவை, தாமகாத்தா அவை, பன்னாட்டு நீதிமன்றம் மற்றும் ஐ.நா.வின் தலைமைச் செயலகம் ஆகியவை முக்கிய அங்கங்களாகும்.
பொது சபை (General Assembly)
ஐ.நா. சபையின் அனைத்து அமைப்புகளிலும் முக்கியமானது பொது சபை ஆகும். ஐ.நா. சபையின் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பொது சபையின் உறுப்பினர்களாவர். ஓவ்வொரு உறுப்பு நாடும் ஐந்து உறுப்பினர்கள் வரை இந்த அவைக்கு அனுப்பலாம். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு நாட்டிற்க்கும் ஒரு வாக்கு மட்டுமே உண்டு. ஆண்டுக்கு ஒரு முறை செப்டம்பர் மாதத்தில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெறும். பாதுகாப்பு அவையின் வேண்டுகோளுக்கிணங்க அவசர கூட்டங்களும் நடத்தப்படும். முக்கியமாக அமைதி, பாதுகாப்பு, புதிய உறுப்பு நாடுகளை சேர்த்தல், வரவு செலவு திட்டங்களை நிறைவேற்றுதல் போன்றவை ஐ.நா. பொதுச் சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பிர்களின் ஆதரவுடன் மட்டுமே நிறைவேற்றப்படுகிறது.
ஐ.நா. பொது சபையின் முக்கிய செயல்பாடுகள்
- பொதுச்சபையில் புதிய சட்டங்களை உருவாக்கவும், சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் முடியும்.
- ஐ.நா.வின் ஆண்டறிக்கை மற்றும் ஐ.நா வின் பிற அமைப்புகளை ஆய்வு செய்யும் அதிகாரம் பொதுச் சபைக்கு உண்டு
- ஐ.நா பொதுச்சபை, ஐ.நா.பாதுகாப்பு அவையுடன் இணைந்து பொருளாதார மற்றும் சமூக சபை உறுப்பினர்கள், அறங்காவல் அவை உறுப்பினர்கள், பன்னாட்டு நீதிமன்ற நீதிபதிகள், பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினரல்லாதவர்களையும் தேர்தெடுக்கும்.
- முக்கியமான விசயங்களில் பொதுச் சபையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் முடிவுகள் எடுக்கப்டுகின்றன