இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழர்களின் பங்கு வினா விடைகள்

1. இந்தியா விடுதலை அடைந்த பொழுது சென்னை மாகாணத்தின் முதலைமச்சராக இருந்தவர் யார்?
A. இராஜாஜி
B. காமராசர்
C. டி.பிரகாசம்
D. ஒ.பி.ராமசாமி
Answer
D. ஒ.பி.ராமசாமி
2. 1930-இல் வேதாரண்யம் உப்பு சந்த்யாகிரகப் போராட்டத்தின் பின்னர் ‘சர்தார்’ என்ற பட்டம் யாருக்கு அளிக்கப்பட்டது?
A. காமராசர்
B. நாமக்கல் இராமலிங்கம்
C. வல்லபாய் படேல்
D. வேதரத்தினம்
Answer
D. வேதரத்தினம்
3. 1929-இல் சைமன் குழு சென்னை மாகாணத்திற்கு வருகை தந்த பொழுது சைமன் குழு எதிர்ப்புப் போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் யார்?
A. இராஜாஜி
B. பெரியார்
C. எஸ்.சத்தியமூர்த்தி
D. வ.உ.சிதம்பரனார்
Answer
C. எஸ்.சத்தியமூர்த்தி
4. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
  (நிகழ்வு) (ஆண்டு)
A. திருநேல்வெலி கலகம் 1908
B. சுதேசி நீராவி கப்பல் கழகம் உதயமாதல் 1911
C. பவழ ஆளைத் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம் 1908
D. கலெக்டர் ஆஷ் சுட்டுக் கொலை 1911
Answer
B. சுதேசி நீராவி கப்பல் கழகம் உதயமாதல் - 1911
5. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
  (நிகழ்வு) (ஆண்டு)
A. சென்னை சுதேசி சிங்கம் லட்சுமி நரசு செட்டி
B. சென்னை இந்து சமூகச் சீர்திருத்த கழகம் வீரசலிங்கம் பந்தலு
C. சென்னை மகாஜன சங்கம் பி.அனந்தாச்சார்லு
D. சென்னை திராவிட சங்கம் பெரியார்
Answer
D. சென்னை திராவிட சங்கம் – பெரியார்
6. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
  (நூல்) (ஆசிரியர்)
A. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இராபர்ட் கால்டுவெல்
B. சுதேச கீதங்கள் பாரதியார்
C. சிறையில் தவம் இராஜாஜி
D. பணத்தோட்டம் காமராசர்
Answer
D. பணத்தோட்டம் – காமராசர்
7. பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது சென்னை மாகாணத்தில் ‘சுயாட்சி’ முறை எந்த சட்டம் மூலம் அறிமுகபடுத்தப்பட்டது?
A. இந்திய அரசு சட்டம் 1937
B. இந்திய அரசு சட்டம் 1935
C. இந்திய அரசு சட்டம் 1919
D. இந்திய அரசு சட்டம் 1858
Answer
B. இந்திய அரசு சட்டம் 1935
8. பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது சென்னை மாகாணத்தில் அப்பொழுது உச்ச நீதி மன்றம் அமைக்கப்பட்டது?
A. 1862
B. 1937
C. 1801
D. 1774
Answer
C. 1801
9. 1857 முதலாவது இந்திய சுதந்திர போராட்டம் ஈனும் நூலை மராத்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
A. வாஞ்சிநாதன்
B. வ.வே.சு ஐயர்
C. பாலகங்காதர திலகர்
D. பாரதியார்
Answer
B. வ.வே.சு ஐயர்
10. எங்கள் காங்கிரஸ் யாத்திரை என்னும் நூலினை வெளியிட்டவர் யார்
A. நாமக்கல் இராமலிங்கனார்
B. இராஜாஜி
C. டி.பிரகாசம்
D. பாரதியார்
Answer
D. பாரதியார்
11. "சுதந்திரானந்தா" என்னும் சிறப்புப் பெயரை தனக்கு தானே சூட்டிக் கொண்டவர் யார்?
A. பாரதியார்
B. வாஞ்சிநாதன்
C. சுப்பிரமணிய சிவா
D. ம.பொ.சிவஞானம்
Answer
C. சுப்பிரமணிய சிவா
12. போராட்டவாதிகளை எல்லாம் விஞ்சி நிற்கும் போராட்டவாதி என காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர் யார்?
A. இராஜாஜி
B. வ.உ.சிதம்பரனார்
C. அன்னிபெசன்ட்
D. திருப்பபூர் குமரன்
Answer
C. அன்னிபெசன்ட்
<
13. 1927-இல் சென்னை மாகாணத்தில் நீல் சிலை அகற்றும் போராட்டத்திற்கு யாருடைய தலைமையில் சத்தியாகிரக குழு அமைக்கப்பட்டது?
A. எஸ்.சத்தியமூர்த்தி
B. பெரியார்
C. இராஜாஜி
D. ந.சோமயாஜுலு
Answer
D. ந.சோமயாஜுலு
14. 1930-இல் இராஜாஜி தலைமையிலான சத்தியாகிரகிகள் திருச்சியில் இருந்து நடை பயணம் மேற்கொண்டு எந்த இடத்தை அடைந்து உப்பு கய்ச்சினர்?
A. அகஸ்தியம் பள்ளி
B. தொரப் பள்ளி
C. பஸ்தலப் பள்ளி
D. பேடரப் பள்ளி
Answer
A. அகஸ்தியம் பள்ளி
15. 1930-இல் சென்னையில் நடந்த உப்பு சத்யாகிரகப் போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் யார்?
A. எஸ்.சத்தியமூர்த்தி
B. பிட்டி தியாகராயர்
C. ஓமந்தூர் ராமசாமியார்
D. டி.பிரகாசம்
Answer
D. டி.பிரகாசம்
16. 1940-இல் சென்னை மாகாணத்தில் நடந்த தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட முதல் நபர் யார்?
A. ஆச்சார்யா வினோபாபாவே
B. திருப்பூர் குமரன்
C. டி.எஸ்.எஸ்.ராஜன்
D. காமராஜர்
Answer
C. டி.எஸ்.எஸ்.ராஜன்
17. சென்னை மாகாணத்தில் இனவாரி இட ஒதுக்கீடு உரிமையை பெற்றுத் தருவதற்காக இலண்டன் நகருக்கு சென்று அதற்காக வாதாடியவர் யார்?
A. பெரியார்
B. டி.எம்.நாயர்
C. வ.உ.சிதம்பரனார்
D. பிட்டி தியாகராயர்
Answer
B. டி.எம்.நாயர்
18. 1755-இல் கழகத்தில் ஈடுபட்ட பாளையக்காரர்களை ஒடுக்கியவர் யார்?
A. பானர்மேன்
B. காமப்பெல்
C. மாபஸ்கான்
D. கோபால் நாயக்கர்
Answer
C. மாபஸ்கான்
19. "தென்னிந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தை துவக்கியவர்" என் கருதப்படுபவர் யார்?
A. மருது பாண்டியன்
B. வீரபாண்டிய கட்டபொம்மன்
C. திப்பு சுல்தான்
D. பூலித் தேவர்
Answer
D. பூலித் தேவர்
20. ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களிடம் இருந்து வரி வசூல் செய்ய வழி வகுத்த உடன் படிக்கை எது?
A. கர்நாடகா உடன்படிக்கை, 1792
B. கர்நாடகா உடன்படிக்கை, 1784
C. கர்நாடகா உடன்படிக்கை, 1773
D. கர்நாடகா உடன்படிக்கை, 1764
Answer
A. கர்நாடகா உடன்படிக்கை, 1792
21. 1801-இல் ஆங்கிலேயருக்கு எதிராக ‘திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை’ வெளியிட்ட மன்னர் யார்?
A. ஊமைத்துரை
B. வீரபாண்டிய கட்டபொம்மன்
C. மருது பாண்டியர்
D. பூலித் தேவர்
Answer
C. மருது பாண்டியர்
22. தமிழ்நாடு தீவிரவாத காங்கிரசின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
A. வ.உ.சிதம்பரனார்
B. வாஞ்சிநாதன்
C. விஜயராகவசாரியார்
D. சுப்ரமணிய சிவா
Answer
C. விஜயராகவசாரியார்
23. ஆங்கிலேயர்கள் எந்த இடத்தில் நடந்த போரில் கட்டபொம்மனின் படைகளை தோற்கடித்தனர்?
A. கயத்தாறு
B. மதுரை
C. தென்காசி
D. கள்ளர் பட்டி
Answer
D. கள்ளர் பட்டி
24. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
  (வீரமரணம் அடைந்தவர்கள்) (வீரமரணம் அடைந்த இடம்)
A. கட்டபொம்மன் கயத்தாறு
B. தீரன் சின்னமலை சங்ககிரி
C. ஊமைத்துரை பாளையங்கோட்டை
D. சிவசுப்பிரமணியனார் நாகலாபுரம்
Answer
C. ஊமைத்துரை - பாளையங்கோட்டை
25. 1801-இல் ஆங்கிலேயரிடமிருந்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கைப்பற்றியவர் யார்?
A. வீர பாண்டிய கட்ட பொம்மன்
B. சிவசுப்பிரமணினார்
C. மருது பாண்டியர்
D. ஊமைத்துரை
Answer
D. ஊமைத்துரை
26. தமிழகம் ஆங்கிலேயரின் நேரடிக் கட்டுப்பாட்டில் எந்த உடன்படிக்கை மூலம் கொண்டுவரப்பட்டது?
A. கர்நாடக உடன்படிக்கை 1801
B. கர்நாடக உடன்படிக்கை 1806
C. கர்நாடக உடன்படிக்கை 1858
D. கர்நாடக உடன்படிக்கை 1857
Answer
A. கர்நாடக உடன்படிக்கை 1801
27. 1806-இல் வேலூர் புரட்சியின் பொழுது கிளர்ச்சியாளர்களால் சுல்தானாக அறிவிக்கப்பட்டவர் யார்?
A. மொய்சுதீன்
B. கான்சாகிப்
C. திப்புசுல்தான்
D. பதே ஹைதர்
Answer
D. பதே ஹைதர்
28. 1806-இல் நடந்த வேலூர் புரட்சியானது 1857-இல் நடந்த சிப்பாய் புரட்சிக்கு வழி வகுத்தது என்னும் கூற்றை மறுப்பவர் யார்?
A. சவார்க்கர்
B. என்.சஞ்சீவி
C. கே.கே.பிள்ளை
D. கே.ராசய்யன்
Answer
C. கே.கே.பிள்ளை
29. 1922-இல் திருப்பூரில் நடந்த சென்னை மாகான காங்கிரஸ் மாநாட்டில் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A. திரு.வி.கல்யாண சுந்தரனார்
B. இராஜாஜி
C. பெரியார்
D. எஸ்.சத்தியமூர்த்தி
Answer
C. பெரியார்
30. புகழ் பெற்ற திருச்சி பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
A. வீரபாண்டிய கட்டபொம்மன்
B. மருது பாண்டியர்
C. தீரன் சின்னமலை
D. ஹைதர் அலி
Answer
. B. மருது பாண்டியர்
31. வேலூர் கலகத்திற்கான (1806) உடனடிக்காரணம் என்ன?
A. துப்பாக்கிகள் அறிமுகம்
B. கொழுப்பு தடவிய தோட்டாக்கள் அறிமுகம்
C. திப்பு சுல்தானின் இறப்பு
D. அக்னியு தலைப்பாகை அறிமுகம்
Answer
D. அக்னியு தலைப்பாகை அறிமுகம்
34. தமிழகத்தில் பாளையக்காரார் என்னும் அமைப்பை அரியநாதரின் உதவியுடன் அறிமுகபடுத்தியவர்?
A. திருமலை நாயக்கர்
B. கிருஷ்ணப்ப நாயக்கர்
C. வீரபாண்டிய கட்ட பொம்மன்
D. விஸ்வநாத நாயக்கர்
Answer
D. விஸ்வநாத நாயக்கர்
35. வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் எப்பொழுது தூக்கில் இடப்பட்டார்?
A. அக்டோபர் 16, 1799
B. அக்டோபர் 16, 1790
C. அக்டோபர் 16, 1792
D. அக்டோபர் 16, 1793
Answer
A. அக்டோபர் 16, 1799
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்