இந்திய பொருளாதாரம் வினா விடைகள்

1. ’இந்திய உணவுக் கழகம்’ எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A. 1965
B. 1955
C. 1945
D. 1935
Answer
A. 1965
2. “தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்”எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ?
A. 1948
B. 1949
C. 1959
D. 1969
Answer
B. 1949
3. இந்தியாவில் மிக பழமையான இரும்பு உருக்குத் தொழிற்சாலை
A. ஜாம்ஷெட்பூர் டிஸ்கோ
B. பரம்பூர் டிஸ்கோ
C. துர்க்காபூர் இரும்பு உருக்காலை
D. ரூர்க்கேலா இரும்பு உருக்காலை
Answer
A. ஜாம்ஷெட்பூர் டிஸ்கோ
4. குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை (Family Planning Program) நமது நாடு அறிமுகப்படுத்திய வருடம் யாது?
A. 1952
B. 1962
C. 1972
D. 1982
Answer
A. 1952
5. பொருளாதாரத் திட்டமிடல் என்பது இந்தப் பட்டியலில் உள்ளது
A. மத்திய அமைச்சுப் பட்டியல்
B. மாநில அமைச்சுப் பட்டியல்
C. இரு அமைச்சுகளுக்கும் பொதுவான பட்டியல்
D. எந்தப் பட்டியலிலும் குறிப்பிடாதது
Answer
A. மத்திய அமைச்சுப் பட்டியல்
6. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (IRDA) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது
A. 1996
B. 2000
C. 2001
D. 2004
Answer
B. 2000
7. 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் எந்தத் துறைக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டது?
A. எரிசக்தித் துறை
B. சமூகத் துறை
C. போக்குவரத்துத் துறை
D. தொலைத் தொடர்புத் துறை
Answer
B. சமூகத் துறை
8. 1977-ம் ஆண்டு இந்திய தொழில் கொள்கையில் ஊடுருவிச் சென்ற கூற்று
A. பேரளவு தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவது
B. அடிப்படைத் தொழிலகங்களை முன்னேற்றுவது
C. சிறிய மற்றும் குடிசைத் தொழில்களை ஊக்குவிப்பது
D. வேளாண் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பது
Answer
C. சிறிய மற்றும் குடிசைத் தொழில்களை ஊக்குவிப்பது
9. பூஜ்ஜிய அடிப்படை வரவு செலவு நிதி திட்டமிடல் முதல் முறையாக இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டது எப்போது?
A. ஏப்ரல் 1987
B. ஏப்ரல் 2000
C. ஏப்ரல் 1991
D. ஏதுமில்லை
Answer
A. ஏப்ரல் 1987
10. திட்டமிடப்பட்ட வங்கிகள் என்பது
A. ரூபாய் 100 கோடி வைப்பாகக் கொண்ட வங்கி
B. இந்திய ரிசர்வ் வங்கியின் இராண்டாம் பட்டியலில் அடங்கிய வங்கி
C. 100 கிளைகளுக்கு மேல் உள்ள வங்கி
D. தாழ்த்தப்பட்ட பிரிவினர்க்கான வங்கி
Answer
B. இந்திய ரிசர்வ் வங்கியின் இராண்டாம் பட்டியலில் அடங்கிய வங்கி
11. தடையில்லா வாணிபத்தில் சமச்சீரற்ற வருமானத்திற்க்கான காரணம் யாது?
A. தடையில்லாப் போட்டி
B. தனியார் சொத்து மட்டும்
C. தனியார் சொத்து மற்றும் பரம்பரைச் சொத்து
D. இறுதிநிலை உற்பத்தித் திறன் உழைப்பில் வேறுபாடு
Answer
A. தடையில்லாப் போட்டி
12. கறுப்புப் பணம் என்பது
A. கறுப்புச் சந்தை பேரங்கள் மூலமாக குவித்த பணம்
B. வரி ஏய்த்தலினால் குவித்துள்ள பணம்
C. சர்வாதீன வாணிபத்தின் வாயிலாக குவிந்த பணம்
D. இவை அனைத்தும் உள்ளடக்கியது
Answer
D. இவை அனைத்தும் உள்ளடக்கியது
13. தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட திட்ட காலம்
A. ஐந்தாம் ஐத்தாண்டுத் திட்ட காலம்
B. இரண்டாம் ஐந்தாண்டு திட்ட காலம்
C. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்ட காலம்
D. ஆறாம் ஐந்த்தாண்டு திட்டம்
Answer
D. ஆறாம் ஐந்த்தாண்டு திட்டம்
14. கலப்புப் பொருளாதாரக் கொள்கை’ யை மேற்கொள்ள இந்தியா விருப்பம் தெரிவித்தது எப்போது?
A. இந்திய அரசியல் சட்ட உருவாக்கம் சமயம்
B. இரண்டாம் ஐந்தாண்டு திட்ட காலத்தில்
C. 1948-ம் ஆண்டு இந்திய தொழில் கொள்கை உருவாக்கும் சமயம்
D. இவற்றுள் ஏதும் இல்லை
Answer
C. 1948-ம் ஆண்டு இந்திய தொழில் கொள்கை உருவாக்கும் சமயம்
15. திட்டக்கமிஷனின் முதல் துணைத்தலைவர் யார்?
A. ஜவகர்லால் நேரு
B. லால் பகதூர் சாஸ்திரி
C. குல்சாரிலால் தேசாய்
D. மொரார்ஜி தேசாய்
Answer
C. குல்சாரிலால் தேசாய்
16. நேரடி அன்னிய முதலீடு எந்தத் துறைக்கு பெறப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது?
A. மென்பொருள் துறை
B. அடிப்படைக் கடட்டமைப்பு
C. அதிக அளவு விற்கும் நுகர்வோர் பொருட்கள்
D. இவை எதுவுமில்லை
Answer
A. மென்பொருள் துறை
17. இந்திய வறுமை கணக்கீடு தொடர்பாக அறிக்கை சமர்பித்த தெண்டுல்கர் குழுவின் முடிவுகளை மறு ஆய்வு செய்வதக்காக திட்ட குழுவால் நியமிக்கப்பட்ட இந்தியப் பொருளாதார நிபுணர் யார்?
A. C. ரங்கராஜன்
B. டாக்டர் மன்மோகன்சிங்
C. பேராசியர் ரஜினி கோத்தாரி
D. P. சிதம்பரம் மற்றும் கிரிஸ் கோபாலகிருஷ்ணன்
Answer
D. P. சிதம்பரம் மற்றும் கிரிஸ் கோபாலகிருஷ்ணன்
18. “Poverty and un-British Rule in India” என்ற புத்தகத்தில் தாதாபாய் நௌரோஜி இந்தியர்களின் ஒரு வருடத்தின் தலா வருமானம் எவ்வளவு ருபாயாகக் கணக்கிட்டார்?
A. ரூ.10
B. ரூ.20
C. ரூ.30
D. ரூ.40
Answer
B. ரூ.20
19. பொதுத்துறை வங்கிகளில் உள்ள குறைகளை ஆராய அமைத்திட்ட நிதி அமைப்பு கமிட்டியின் தலைவர்
A. டாக்டர் மன்மோகன் சிங்
B. டாக்டர் ரெங்கநாதன்
C. டாக்டர் நரசிம்மன்
D. டாக்டர் ராஜா செல்லையா
Answer
C. டாக்டர் நரசிம்மன்
20. PQLI என்பது ________ ன் குறியீடு
A. பொருளாதா வளர்ச்சி
B. பொருளாதார நலன்
C. பொருளாதார முன்னேற்றம்
D. பொருளாதார மேம்பாடு
Answer
B. பொருளாதார நலன்
21. "காட" (GATT) என்ற அமைப்பு எப்போது துவக்கப்பட்டது?
A. 1947
B. 1948
C. 1950
D. 1956
Answer
A. 1947
22. அந்நியச் செலாவணி காப்பாளர்
A. நாணயமாற்று வங்கி ஆகும்
B. பாரத ஸ்டேட் வங்கி ஆகும்
C. வெளிநாட்டு வங்கி ஆகும்
D. இந்திய ரிசர்வ் வங்கி ஆகும்
Answer
D. இந்திய ரிசர்வ் வங்கி ஆகும்
23. கீழுள்ள நகரங்களில் எதில் சர்வதேச விமான நிலையம் இல்லை?
A. மதுரை
B. திருச்சி
C. தூத்துக்குடி
D. கோயமுத்தூர்
Answer
C. தூத்துக்குடி
24. கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது?
A. உற்பத்தியாளர் கூட்டுறவு – குறைந்த வட்டிக்கு கடன் வசதி
B. நுகர்வோர் கூட்டுறவு – மாவட்ட மட்டத்தில் இயங்குவது
C. மத்திய கூட்டுறவு வங்கி – நல்ல விலைகள் பெற்றுத் தருவது
D. கூட்டுறவின் குறிக்கோள் – ஒவ்வொருவரும் அனைவருக்காக, அனைவரும் ஒவ்வொருவருக்காக
Answer
D. கூட்டுறவின் குறிக்கோள் – ஒவ்வொருவரும் அனைவருக்காக, அனைவரும் ஒவ்வொருவருக்காக
25. நுகர்வு என்ற பட்சத்தில் 'அபரிகரக' என்பதின் பொருள்
A. தேவைகளைக் கட்டுப்படுத்துதல்
B. குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்தல்
C. எது தேவையோ அவற்றை மட்டும் பூர்த்தி செய்தல்
D. இவை அனைத்தும்
Answer
D. இவை அனைத்தும்
26. 1969-ம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியின் போது எத்தனை இந்திய தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன?
A. 10
B. 11
C. 14
D. 20
Answer
C. 14
27. இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்திய அமைப்பு
A. I.C.A.R
B. I.C.M.R
C. I.S.R.O
D. I.C.S.I.R
Answer
A. I.C.A.R
28. 'வறுமையை விரட்டுதல்' என்ற சொல் பயன் படுத்தப்பட்டது
A. முதல் ஐந்தாண்டுத் திட்டகாலம்
B. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலம்
C. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டகாலம்
D. ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டகாலம்
Answer
D. ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டகாலம்
29. எந்த ஆண்டு தேசிய விவசாய கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) துவங்கப்பட்டது
A. 1982
B. 1992
C. 1972
D. 1962
Answer
A. 1982
30. 1934-ம் ஆண்டு எழுதப்பட்ட ‘திட்டமிட்ட இந்திய பொருளாதரம் ‘என்ற நூலின் ஆசிரியர்
A. மொரார்ஜி தேசாய்
B. பண்டித நேரு
C. எம் .விஸ்வேஸ்வரய்யா
D. டாக்டர் காட்கில்
Answer
C. எம் .விஸ்வேஸ்வரய்யா
31. நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்யா சென்னின் பங்களிப்பு பின்வரும் பொருளாதாரத் துறை ஒன்றைச் சார்ந்தது
A. கிராமப்புற பொருளாதாரம்
B. தொழில்துறை பொருளாதாரம்
C. நலத்துறை பொருளாதாரம்
D. கணித பொருளாதாரம்
Answer
C. நலத்துறை பொருளாதாரம்
32. இந்திய நாணயங்களில் எப்போது தசம ஸ்தான அமைப்பு செயலாக்கப்படது?
A. 1947
B. 1950
C. 1957
D. 1960
Answer
C. 1957
33. ஆழமான விவசாயத் திட்டத்தின் குறிக்கோள்
A. குறிப்பிட்ட சில இடங்களில் முக்கிய பயிர்களின் உற்பத்தியைப் பெருக வழிவகை செய்தல்
B. விவசாயிகளின் நடைமுறையில் மாற்றம் விளைவிக்கும் காரணிகளைக் கண்டறிதல்
C. மாவட்ட அளவில் ஆட்சியமைப்பிணை உண்டு பண்ணுதல்
D. புதிய யுக்திகளைவிவசாய உற்பத்தி பெருக்கத்திற்கு கண்டுபிடித்து பயன்படுத்துதல்
Answer
D. புதிய யுக்திகளைவிவசாய உற்பத்தி பெருக்கத்திற்கு கண்டுபிடித்து பயன்படுத்துதல்
34. 1951-ம் ஆண்டு இயற்றப்பட்ட தொழில் சட்டம் (வளர்ச்சி கட்டுப்பாடு) படி இதற்கு தொழில் அனுமதி பெற வேண்டும்.
A. சிறு தொழில்கள்
B. எந்த அளவு உற்பத்தியும்
C. பெரும் தொழில்கள்
D. ரூ.5 கோடி அதன் மேல் முதலீடுள்ள எல்லாத் தொழில்களும்
Answer
A. சிறு தொழில்கள்
35. மாவட்டத் தொழில் மையங்கள் எந்த ஆண்டின் கொள்கைப்படி அமைக்கப்பட்டன?
A. 1956
B. 1973
C. 1977
D. 1980
Answer
C. 1977
36. இந்தியாவில் வறுமைக்கோட்டை மதிப்பீடு செய்ய எந்த குழுவின் பரிந்துரைகள் நடைமுறை செயல் பாட்டில் உள்ளன?
A. தத் குழு
B. செல்லா குழு
C. சக்கரவர்த்தி குழு
D. லக்தவாளா குழு
Answer
D. லக்தவாளா குழு
37. TRYSEM கீழ்க்கண்ட பிரிவினருக்குப் பயிற்சி வழங்குகிறது
A. இளம் விஞ்ஞானிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க
B. கிராமப்புற இளைஞர்களுக்கு சுயவேளைவாயப்பு வழங்க
C. இளம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க
D. இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க
Answer
B. கிராமப்புற இளைஞர்களுக்கு சுயவேளைவாயப்பு வழங்க
38. ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேளைக்குச் செல்லும்போது வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுவதை இவ்வாறு கூறலாம்?
A. பருவகால வேலையின்மை
B. பிறழ்ச்சி வேலையின்மை
C. தொழில்நுட்ப வேலையின்மை
D. சுழல் வேலையின்மை
Answer
B. பிறழ்ச்சி வேலையின்மை
39. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் உருவானபோது, இந்திய திட்டத்திற்கு யாரால் மாற்றுமுறை கொடுக்கப்பட்டது?
A. P.C. மஹலநோபிஸ்
B. C.N.வக்கீல் மற்றும் P.R.பிரேமானந்தா
C. நர்க்ஸ்
D. சும்பீட்டர்
Answer
B. C.N.வக்கீல் மற்றும் P.R.பிரேமானந்தா
40. தனிநபர் தலா வருமானம் எப்போது உயர்கிறது?
A. மொத்த தேசிய உற்பத்தியும் மக்கள் தொகையும் ஒரே நேரத்தில் உயரும்போது
B. மொத்த தேசிய உற்பத்தியும் மக்கள் தொகையும் குறையும் போது
C. மொத்த தேசிய உற்பத்தி அதிகரிப்பு மக்கள் தொகையைவிட அதிகமாக அதிகரிக்கும் போது
D. மொத்த தேசிய உற்பத்தி மக்கள் தொகையை விட குறையும் போது
Answer
C. மொத்த தேசிய உற்பத்தி அதிகரிப்பு மக்கள் தொகையைவிட அதிகமாக அதிகரிக்கும் போது
41. இந்தியாவில் செலவு வரி இவரால் அறிமுகம் செய்யப்பட்டது
A. டி.டி.கிருஷ்ணமாச்சாரி
B. சி.இராஜகோபாலாச்சாரி
C. யஷ்வந்த் சின்ஹா
D. ஆர்.வெங்கட்ராமன்
Answer
A. டி.டி.கிருஷ்ணமாச்சாரி
42. 'MOTHER INDESTRY'(தாய்தொழில்துறை)என்று அழைக்கப்படும் தொழில் துறை யாது?
A. இரும்பு மற்றும் எஃகு தொழில்துறை
B. விவசாயத் தொழில்துறை
C. நெசவுத்தொழில்துறை
D. சிமெண்ட் தொழில்துறை
Answer
A. இரும்பு மற்றும் எஃகு தொழில்துறை
43. சுதந்திர இந்தியாவின் முதல் வரவு-செலவு திட்டத்தை அளித்தவர் யார்?
A. மொரார்ஜி தேசாய்
B. ஜான் மாத்தாய்
C. ஆர்.கே.சண்முகம் செட்டியார்
D. N.K.சந்தா
Answer
C. ஆர்.கே.சண்முகம் செட்டியார்
44. இந்திய அரசு இவரது தலைமையின் கீழ் முற்றுரிமை விசாரணைக் குழுவை நிறுவியது
A. மஹலநோபிஸ்
B. கே.சி.தாஸ் குப்தா
C. நேரு
D. இந்திராகாந்தி
Answer
B. கே.சி.தாஸ் குப்தா
45. கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் இயற்ற்றப்பட்ட ஆண்டு எது?
A. 1904
B. 1906
C. 1908
D. 1909
Answer
A. 1904
46. விஞ்ஞான அடிப்படையில் தேசிய வருமானத்தை முதன் முதலில் கணக்கிட முயன்றவர் யார்?
A. P.C. மஹலநோபிஸ்
B. பேராசிரியர் VKRV. ராவ்
C. தாதாபாய் நௌரோஜி
D. பேராசிரியர் காட்கில்
Answer
B. பேராசிரியர் VKRV. ராவ்
47. நாணய மதிப்பு இறக்கம்
A. ஏற்றுமதியை மேல்நோக்கிக் கொணர உதவுகிறது
B. சேமிப்பை மேல்நோக்கி கொணர உதவுகிறது
C. தேசிய வருவாயை மேல்நோக்கி கொணர உதவுகிறது
D. பொருளாதார சுதந்திரத்தை மேல்நோக்கி கொணர உதவுகிறது
Answer
B. சேமிப்பை மேல்நோக்கி கொணர உதவுகிறது
48. முதன் முதலில் பொருளாதரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்
A. ஜே.இ.மீட் மற்றும் ஒலின்
B. ரேஹனர் பிரிஸ்க் மற்றும் ஜேன்டின்பர்கன்
C. குன்னார் மிர்டால் மற்றும் கூப்மேன்
D. ஜே.ஆர்.ஹிக்ஸ் மற்றும் பால் சாமுவேல்சன்
Answer
B. ரேஹனர் பிரிஸ்க் மற்றும் ஜேன்டின்பர்கன்
49. PODSCORB என்பதை யார் முதலில் அறிமுகப்படுத்தினார்?
A. லிண்டல் அர்விக்
B. லூதர் குல்லிக்
C. ரால்ஃப் டேவிஸ்
D. பீட்டர் எஃப் ட்ரக்கர்
Answer
B. லூதர் குல்லிக்
50. அரசிறைக் கொள்கையின் நோக்கம்
A. பொருளாதார முன்னேற்றம்
B. பகிர்வு நிதி
C. விலை நிலைப்பாடு
D. இவை அனைத்தும்
Answer
D. இவை அனைத்தும்
51. தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு ----------
A. 2005
B. 2006
C. 2000
D. 2001
Answer
A. 2005
52. மறைமுக வேலையின்மை குறிப்பது
A. நபர்கள் வேலையின்றி இருப்பது
B. குறைந்த அளவு நபர்கள் செய்யக்கூடிய வேலையை அதிக அளவு நபர்கள் செய்தல்
C. பெண்களுக்கிடையேயுள்ள வேலையின்மை
D. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கிடையே உள்ள வேலையின்மை
Answer
B. குறைந்த அளவு நபர்கள் செய்யக்கூடிய வேலையை அதிக அளவு நபர்கள் செய்தல்
53. சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம்?
A. கூட்டுறவுச் சங்கங்களை அமைத்தல்
B. குடிசைத் தொழில்களை நிறுவுதல்
C. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தொழில்களை அமைத்தல்
D. ஊரக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்
Answer
D. ஊரக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்
54. இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEBI) எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
A. 1978
B. 1988
C. 1991
D. 1996
Answer
B. 1988
55. நிகர நாட்டு உற்பத்தியில் (NNI) யில் சேர்த்துக் கொள்ளாதது
A. மறைமுக வர்த்தக வரிகள்
B. கம்பெனி வருவாய் வரிகள்
C. தேய்மானச் செலவு
D. வீட்டின் சொந்தக்கரர்களின் வீட்டு வாடகை மதிப்பு
Answer
D. வீட்டின் சொந்தக்கரர்களின் வீட்டு வாடகை மதிப்பு
56. தேசிய வளர்ச்சிக் குழுமம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
A. 3, மார்ச், 1951
B. 2, ஜுன், 1952
C. 6, ஆகஸ்ட், 1952
D. 5, டிசம்பர், 1953
Answer
C. 6, ஆகஸ்ட், 1952
57. மக்கள்தொகை இலாப ஈவு என்ற கருத்து வெளிப்படுத்துவது
A. அதிக விகித அளவில் வேலை பார்க்கும் வயதிலானவர்கள் (15முதல் 64வரை )
B. சார்ந்திருப்போரின் சதவீதம் வேலை பார்க்கும் வயதிலான மக்களை விட அதிகமாக காணப்படுகிறது
C. இளைய வயதிலானவருக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைப்பது
D. நிலையான,சமச்சீரான மக்களைக் கொண்டிருப்பது
Answer
A. அதிக விகித அளவில் வேலை பார்க்கும் வயதிலானவர்கள் (15முதல் 64வரை )
58. இந்தியாவில் பின்ப்பற்றப்படும் வங்கி வீதம்
A. கழிவு வீதம்
B. தண்டனை வீதம்
C. வசதி வீதம்
D. இவற்றில் எதுவும் இல்லை
Answer
A. கழிவு வீதம்
59. இறுதிச் சரகிருப்பை மதிப்பிட வேண்டியது
A. அடக்கவிலையில்
B. சந்தைவிலையில்
C. அடக்கவிலை அல்லது சந்தைவிலை இதில் குறைவான ஒன்றில்
D. இவற்றில் எதுவுமில்லை
Answer
A. அடக்கவிலையில்
60. இந்திய ரிசர்வ் வங்கியின் இதழ் எவ்வளவு காலத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும்?
A. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை
B. மாதந்தோறும்
C. ஆறுமாதங்களுக்கு ஒரு முறை
D. ஆண்டுதோறும்
Answer
B. மாதந்தோறும்
61. கீழ்காணும் எதனால் தேசிய மொத்த உற்பத்தி பெருகும்?
A. மூலதானத்தில் வளர்ச்சி
B. உபரி வரவு – செலவுத் திட்டம்
C. தேசிய கடன் குறைவு
D. வட்டி வீதத்தில் உயர்வு
Answer
C. தேசிய கடன் குறைவு
62. 1991-ல் இந்தியா, ரூபாய் மதிப்பை குறைத்த விழுக்காட்டின் அளவு
A. 15.5%
B. 18%
C. 22%
D. 33%
Answer
C. 22%
63. இந்தியாவின் நிதிக்குழுவின் கடமை
A. நிதி அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவது
B. மாநிலங்களுக்கு இடையேயுள்ள நிதித் தகராறுகளைத் தீர்த்து வைப்பது
C. பன்னாட்டு பேரங்களில் இடைத்தரகராகச் செயலாற்றுவது
D. மத்திய-மாநில அரசுகளுக்குகிடையே உள்ள நிதி உறவுகள் குறித்து பரிந்துரை செய்தல்
Answer
D. மத்திய-மாநில அரசுகளுக்குகிடையே உள்ள நிதி உறவுகள் குறித்து பரிந்துரை செய்தல்
64. இந்தியாவின் GDP என்பது GNP விட அதிகமாக உள்ள காரணம்
A. இறக்குமதி > ஏற்றுமதி
B. முதலீடு வருகை > முதலீடு வெளியேற்றம்
C. வரவின் இறுதிக் கணக்கு ஒன்றுமில்லை
D. அரசாங்க செலவீனம் அதன் வரவீனத்தை விட அதிகம்
Answer
A. இறக்குமதி > ஏற்றுமதி
65. நபார்டு அமைப்பின் முதன்மையான பணி கீழ்க்காணும் எதன் வளச்சிக்கு நிதியுதவி அளிப்பது?
A. விவசாயம்
B. கிராமிய மற்றும் சிறுதொழில்கள்
C. கைத்தொழில் மற்றும் கிராமியத்தொழில்கள்
D. இவையனைத்தும்
Answer
D. இவையனைத்தும்
66. கீழ்க்காணும் பட்டியலில் உள்ளவற்றை தொழிற்சாலை அமைக்கப்பட்டதன் அடிப்படையில் ஏறுவரிசையில் வரிசைபடுத்துக
A. பொகாரோ, விசாகப்பட்டினம், பிலாய், ஜாம்செட்பூர்
B. ஜாம்செட்பூர், பிலாய், பொகாரோ, விசாகப்பட்டினம்
C. பிலாய், ஜாம்செட்பூர், விசாகப்பட்டினம், பொகாரோ
D. ஜாம்செட்பூர், பொகாரோ, பிலாய், விசாகப்பட்டினம்
Answer
B. ஜாம்செட்பூர், பிலாய், பொகாரோ, விசாகப்பட்டினம்
67. இந்தியாவில் பொதுத்துறை கணிசமான பெரும் பங்காற்றுவது எத்துறையில்?
A. போக்குவரத்தில்
B. இரும்பு எஃகு உற்பத்தியில்
C. வணிகம் சார்த்த வங்கி அமைப்பில்
D. திட்டமிட்ட காலவரைக்குட்பட்ட கடன் வழங்கு அமைப்புகளில்
Answer
C. வணிகம் சார்த்த வங்கி அமைப்பில்
68. தலா வருமானம் கூடுகின்ற பொழுது உழைப்பில் வேளாண்மையின் பங்கு
A. குறைகிறது
B. அதிகரிக்கிறது
C. நிரந்தரமாகிறது
D. முதலில் அதிகரித்து பின் குறைகிறது
Answer
A. குறைகிறது
69. தமிழக அரசு நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் கொடுவரப்பட்ட ஆண்டு யாது?
A. 1977
B. 1988
C. 1999
D. 1995
Answer
B. 1988
70. தொலைநோக்கு திட்டமிடுதல் (Perspective Plan) திட்டகாலம் எவ்வளவு?
A. 5-8 ஆண்டு
B. 10-12 ஆண்டு
C. 12-15 ஆண்டு
D. 20-25 ஆண்டு
Answer
D. 20-25 ஆண்டு
71. நீடித்த வளச்சி (அல்லது) வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய விதிக்கப்பட்டிருக்கும் காலம்
A. 2020
B. 2025
C. 2030
D. 2050
Answer
C. 2030
72. ஐந்தாண்டுத் திட்ட வரைவுக்கு முடிவாக ஒப்புதல் அளிப்பது
A. ஜனாதிபதி
B. தேசிய வளர்ச்சிக்குழு
C. பாராளுமன்றம்
D. திட்டக்குழு
Answer
B. தேசிய வளர்ச்சிக்குழு
73. எந்த ஆண்டு SDR என்ற சர்வதேச இருப்பு IMF வினால் தோற்றுவிக்கப்பட்டது?
A. 1969
B. 1970
C. 1980
D. 1985
Answer
A. 1969
74. கீழ்க்கண்ட கூற்றுக்களைஆராந்து அவற்றுள் எது சரியெனக் காண்க
1. இந்திய இன்சூரன்ஸ் கார்பரேஷனே இந்தியாவிலுள்ள மிகப் பழமையான இன்சுரன்ஸ் கம்பெனி
2. தேசிய இன்சசூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 1972-ம் ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்டது; மேலும் அது இந்திய பொது இன்சூரன்ஸ் அமைப்பின் ஒரு அங்கமாக்கப்பட்டது
3. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியின் தலைமையகம் சென்னையிலுள்ளது
A. 1, 2 மற்றும் 3
B. 1 மற்றும் 2 மட்டும்
C. 2 மற்றும் 3 மட்டும்
D. 1 மற்றும் 3 மட்டும்
Answer
C. 2 மற்றும் 3 மட்டும்
75. 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கம் என்ன?
A. சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சி
B. வறுமை ஒழிப்பு
C. வேகமான மற்றும் அதிக உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி
D. வேகமான, நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி
Answer
D. வேகமான, நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி
76. ஐந்தாண்டுத்திட்டம் என்ற கருத்தமைவு எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
A. இங்கிலாந்து
B. அமெரிக்கா
C. ரஷ்யா
D. ஸ்பெயின்
Answer
C. ரஷ்யா
77. இந்திய மறுமைக் கொள்கை நடைமுறைகள் மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட ஆய்வுகள் தொடர்பானவற்றை பரிசீலனை செய்வதற்காக இந்திய திட்டகுழுவால் நியமிக்கப்பட்ட சுரேஷ் தெண்டுல்கர் குழு டிசம்பர் 2009-ம் ஆண்டு அறிக்கையை சமர்பித்தது. இக்குழு எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது ?
A. 2008
B. 2007
C. 2005
D. 2006
Answer
C. 2005
78. இந்திய பொருளாதாரத்தின் மந்த காலம் என்பது
A. மார்ச் – ஏப்ரல்
B. செம்டம்பர் – டிசம்பர்
C. ஜனவரி – ஜுன்
D. பிப்ரவரி – ஏப்ரல்
Answer
C. ஜனவரி – ஜுன்
79. ஐ.டி.பி.ஐ. (இந்திய தொழில் வளர்ச்சி வங்கி) எப்போது நிறுவப்பட்டது?
A. 1981
B. 1972
C. 1952
D. 1964
Answer
D. 1964
80. சமூக முன்னேற்றத்திட்டம் அக்டோபர் 2-ம் தேதி 1952-ல் தொடங்கப்பட உதவி செய்த நாடு?
A. அமெரிக்கா
B. ஜப்பான்
C. சோவியத் ரஷ்யா
D. பிரான்ஸ்
Answer
C. சோவியத் ரஷ்யா
81. கீழ்க்கண்ட நகரங்களில் எங்கு பங்கு மாற்று நிலையம் செயல்படுகிறது?
A. மதுரை
B. திருச்சி
C. கோயமுத்தூர்
D. சேலம்
Answer
C. கோயமுத்தூர்
82. விவாசய மறுநிதி மேம்பட்டுக் கழகம் எப்போது துவங்கப்பட்டது?
A. ஜுன் 3, 1963
B. ஜுலை 3, 1963
C. ஜுன் 1, 1963
D. ஜுலை 1, 1963
Answer
D. ஜுலை 1, 1963
83. கீழ்கண்டவர்களில் யார் ஒற்றைக் காரணி வாணிப வீதத்தை வடிவமைத்தவர்?
A. ஜேக்கப் வைனர்
B. G.S. டோரன்ஸ்
C. F.W. டாசிக்
D. J.S. மில்
Answer
A. ஜேக்கப் வைனர்
84. இவற்றில் எதை சமூக அவசியாமனவை என அழைப்பர்?
A. ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் கல்வி
B. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கல்வி
C. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
D. கல்வி, போக்குவத்து மற்றும் வங்கியியல்
Answer
A. ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் கல்வி
85. "நுகர்வோர் நீதிமன்றம்" தன் வழக்குகளை எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும்?
A. 50-100 நாட்கள்
B. 90-150 நாட்கள்
C. 180-300 நாட்கள்
D. ஏதுமில்லை
Answer
A. 50-100 நாட்கள்
86. வளர்வீத வரிவிதிப்பு முறை என்பது
A. வருமானம் அதிகரிக்கும் போது வரிவீகிதமும் அதிகரித்தல்
B. வருமானம் அதிகரிக்கும் போது வரி விகிதம் குறைதல்
C. வருமானம் அதிகரிக்கும் போது வரி விகிதம் நிலையாக இருத்தல்
D. இவற்றுள் எதுவுமில்லை
Answer
A. வருமானம் அதிகரிக்கும் போது வரிவீகிதமும் அதிகரித்தல்
87. நிலச்சீர்த்திருத்தத்தின் முக்கியமான மற்றும் இறுதியான குறிக்கோள்
A. இடைத்தரகர்களை நீக்குதல்
B. நில உச்சவரம்பை நிர்ணயித்தல்
C. நியமான வாரத்தை நிர்ணயித்தல்
D. உழுபவனுக்கே நிலத்தைச் சொந்தமாக்குதல்
Answer
D. உழுபவனுக்கே நிலத்தைச் சொந்தமாக்குதல்
88. ரயில்வே துறை வரவு செலவு, பொது வரவு செலவுத் திட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட காலம்
A. 1924-25
B. 1941-42
C. 1947-48
D. 1950-51
Answer
A. 1924-25
89. திறந்த சந்தை செயல்பாடுகள் என்பன யாவை?
A. செபியில் பதிவு செய்துள்ள தரகர்களின் செயல்பாடுகள்
B. ரிசர்வ் வங்கி விற்கும் செலாவணி நாணயம்
C. அரசாங்கம் விற்கும் மிக லாபகரமான பங்குகள், முதலீடுகள்
D. எப்.ஐ.ஐ.கள் விற்கும் பங்குகள்
Answer
C. அரசாங்கம் விற்கும் மிக லாபகரமான பங்குகள், முதலீடுகள்
90. அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A. 1953
B. 1937
C. 1939
D. 1941
Answer
B. 1937
91. இந்திய விவசாயத்தில் கீழ்க்கண்ட எந்தப் பண்புகள் காணப்படுகின்றன?
I மறைமுக வேலையின்மை
II அதிக விளைச்சல்
III பெருவிவசாயிகள் அதிகம்
IV பருவகாற்றின் சூதாட்டம்
A. I மற்றும் II மட்டும்
B. II மற்றும் III மட்டும்
C. II மற்றும் IV மட்டும்
D. I மற்றும் IV மட்டும்
Answer
D. I மற்றும் IV மட்டும்
92. சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
A. 2004
B. 2006
C. 2005
D. 2007
Answer
C. 2005
93. வேளாண்மை விளைக்குழுவின் புதிய பெயர்
A. வேளாண்மை செலவு மற்றும் விலைக்குழு
B. வேளாண்மை செலவுக்குழு
C. கிராமப்புற விலைக்குழு
D. குறைந்தபட்ச ஆதரவு விலைக்குழு
Answer
A. வேளாண்மை செலவு மற்றும் விலைக்குழு
94. 'உணவுக்கான வேலை' என்ற திட்டத்தை மாற்றி அமைத்து மருப்பெயர்ச் சூட்டி ---திட்டம் என அழைக்கப்பட்டது
A. IRDP திட்டம்
B. DPAP திட்டம்
C. RLEP திட்டம்
D. NREP திட்டம்
Answer
A. IRDP திட்டம்
95. மூடிய பொருளாதாரம் என்பது
A. குடிப்பெயர்ப்பை அனுமதிக்காது
B. குடி அமர்தலை அனுமதிக்காது
C. அயல் நாட்டு வாணிபத்தை அனுமதிக்காது
D. உள்நாட்டு வாணிபத்தை அனுமதிக்காது
Answer
C. அயல் நாட்டு வாணிபத்தை அனுமதிக்காது
96. ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வரோஜ்கர் யோஜனை செயல்ப்படுத்தப்பட்ட காலம்
A. ஏப்ரல் 1995
B. ஏப்ரல் 1997
C. ஏப்ரல் 1999
D. ஜூலை 2001
Answer
C. ஏப்ரல் 1999
97. நில உச்சவரம்புச் சட்டம் மாநில அரசால் பின்வரும் எந்த திட்டகாலத்தில் புகுத்தப்பட்டது ?
A. இரண்டாவது திட்டம்
B. மூன்றாவது திட்டம்
C. நான்காவது திட்டம்
D. ஐந்தாவது திட்டம்
Answer
B. மூன்றாவது திட்டம்
98. இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?
A. எம்.எஸ்.விஸ்வநாதன்
B. பி.பி.பால்
C. கே.என்.பாக்ல்
D. வி.குரியன்
Answer
D. வி.குரியன்
99. கீழ்க்கண்ட நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு வரிசை முறையில் அமைக்க
1 பொது இன்சூரன்ஸ் கார்பரேசன் ஆப் இந்தியா
2 யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா
3 இந்தியாவின் சிறு தொழில்கள் முன்னேற்ற வங்கி
4 இந்திய தொழில் முதலீட்டுக் கழகம்
A. 4, 1, 2, 3
B. 4, 2, 1, 3
C. 2, 1, 4, 3
D. 2, 1, 3, 4
Answer
B. 4, 2, 1, 3
100. 'பாம்பே திட்டம்’ எந்த ஆண்டு தீட்டப்பட்டது?
A. 1944
B. 1954
C. 1984
D. 1974
Answer
A. 1944
101. தொழில் பண்ணைகள்(Industrail estates) நிறுவபட்டது ஏனெனில்
A. பெரிய தொழில்களை வளபடுத்த
B. நகரங்களில் தொழில்களை ஏற்படுத்த
C. ஊரக வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க
D. ஊரகங்களில் தொழில் வளத்தை குறைக்க
Answer
B. நகரங்களில் தொழில்களை ஏற்படுத்த
102. இந்தியாவில் சிறுதொழில் வளர்ச்சி கழகம்(SIDCO)ஆரம்பிக்கக்பட்ட ஆண்டு
A. 1960
B. 1970
C. 1980
D. 1990
Answer
C. 1980
103. கீழ்க்கண்டவற்றுள் தொழில்துறை உற்பத்திக் குறியீட்டினை கணக்கிடும் பொழுது கணக்கில் எடுதுக்கொள்ளபடாத துறை எது?
A. உற்பத்தி
B. சுரங்கம்
C. மின்சாரம்
D. பெட்ரோலியம்
Answer
D. பெட்ரோலியம்
104. நிதி யோக் எந்த வகையில் துவங்கப்பட்டது?
A. அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம்
B. நிர்வாக தீர்மானத்தின் மூலம்
C. சட்ட விதிகள் மூலம்
D. அவசரச் சட்டத்தின் மூலம்
Answer
B. நிர்வாக தீர்மானத்தின் மூலம்
105. கீழ்க்கண்டவற்றுள் திட்டக் குழுவினை அமைப்பதற்கு பரிதுரை செய்த குழு எது?
A. சந்தானம் குழு
B. கே.சி.நியோகி குழு
C. ஜவகர்லால் நேரு குழு
D. அசோக் மேத்தா குழு
Answer
B. கே.சி.நியோகி குழு
106. கீழ்க்கண்டவற்றுள் திட்டக் குழுவில் பிரதிநிதித்துவம் பெறாதவர் யார்?
A. உறுப்பினர் செயலாளர்
B. நிபுணத்துவம் பெற்ற உறுப்பினர்கள்
C. மத்திய அமைச்சர்கள்
D. மாநில அரசாங்கங்கள்
Answer
D. மாநில அரசாங்கங்கள்
107. கீழ்க்கண்டவற்றுள் நிதி ஆயோக் அமைப்பின் அடித்தளக் கொள்கை எது?
A. மாநிலங்களுக்கு அதிகாரம் அளித்து முன்னேற்றத்தில் சம பங்காளர்கள் ஆக்குவது
B. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வளங்களைப் பற்றிய அறிவு மையம்
C. செயலாக்கத்தை எளிதாக்கும் ஒத்துழைப்புத் தளம்
D. ஒரே அணுகுமுறை அனைவருக்கும் பொருந்தும் வகையிலான கொள்கை உருவாக்கம்
Answer
D. ஒரே அணுகுமுறை அனைவருக்கும் பொருந்தும் வகையிலான கொள்கை உருவாக்கம்
108. கீழ்க்கண்டவற்றுள் நிதி ஆயோக் குழுவின் தலைவர் யார்?
A. நிதி ஆயோக் குழுவின் தலைமை செயல் அலுவலர்
B. பிரதமர்
C. கேபினட் அமைச்சர்
D. முதலமைச்சர்
Answer
B. பிரதமர்
109. ஒரு மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரியை அப்பதவிக்கு பரிந்துரைப்பவர் யார்?
A. குடியரசுத் தலைவர்
B. மாநில/யூனியன் பிரதேச முதலமைச்சர்
C. மாநில/யுனியன் பிரதேச ஆளுநர்/துணை நிலை ஆளுநர்
D. இந்திய தேர்தல் ஆணையம்
Answer
D. இந்திய தேர்தல் ஆணையம்
110. பஞ்சத்தை தடுத்து மற்றும் தென்னிந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த உதவிய ஆங்கிலேய நீர்பாசன பொறியாலாளர் யார்?
A. விஸ்வேஸ்வராயா
B. சர் ஆர்தர் ஹேஸ்டிங்
C. சர் தாமஸ் ஹிஸ்லோப்
D. சர் ஆர்தர் தாமஸ் காட்டன்
Answer
D. சர் ஆர்தர் தாமஸ் காட்டன்
111. தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்ந்தெடு?
A. வெள்ளிப்புரட்சி – முட்டை உற்பத்தி
B. வெண்மைப் புரட்சி – பால் உற்பத்தி
C. மஞ்சள் புரட்சி – மீன் வளர்ப்பு
D. எபிகல்சர் – தேனீக்களை வளர்த்தல்
Answer
C. மஞ்சள் புரட்சி – மீன் வளர்ப்பு
112. 20 அம்ச திட்டம் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் எப்பொழுது தொடங்கப்பட்டது?
A. 1971
B. 1975
C. 1979
D. 1981
Answer
B. 1975
113. தேசிய குழந்தை தொழிலாளர் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?
A. 1981
B. 1987
C. 1989
D. 1992
Answer
B. 1987
114. கீழ்க்கண்ட எந்த அமைப்பானது "வறுமை என்பது குறைந்தபட்ச வாழ்வு நிலையை அடைய இயலாத நிலைமை" என்று கூறியது?
A. உலக வர்த்தக நிறுவனம்
B. உலக சுகாதார நிறுவனம்
C. திட்டக் குழு
D. உலக வங்கி
Answer
D. உலக வங்கி
115. மீன் பிடித்தல் மற்றும் சுரங்கங்கள் எந்த துறையின் கீழ் வருகிறது?
A. தனியார் துறை
B. முதன்மைத் துறை
C. பணிகள் துறை
D. இரண்டாம் துறை
Answer
B. முதன்மைத் துறை
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்