இந்தியாவின் முக்கியமான வேளாண்மை, தொழில் துறை சார்ந்த புரட்சிகள்
பசுமை புரட்சி : Green Revolution
( வேளாண் உற்பத்தி )- முதல் பசுமை புரட்சி ஏற்பட்ட ஆண்டு - 1967-68
- பசுமை புரட்சியில் முக்கியத்துவம் பெற்ற பயிர்கள் - நெல் மற்றும் கோதுமை
- இரண்டாம் பசுமை புரட்சி ஏற்பட்ட ஆண்டு - 1983-84
- பசுமை புரட்சி ஏற்பட காரணமாக இருந்தவர் - டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் சி.சுப்பிரமணியன்
- இந்திய பசுமை புரட்சியின் தந்தை - எம்.எஸ்.சுவாமிநாதன்
- பசுமை புரட்சி என்ற சொல்லை உருவாக்கியவர் - வில்லியம் எஸ்.காய்டு
- பசுமை புரட்சியின் தந்தை - நார்மன் போர்லாக்
வெண்மை புரட்சி :- White Revolution
( பால் உற்பத்தி )வெண்மை புரட்சி (White Revolution) என்பது புதிய மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப் பயன்படுத்தி பால் உற்பத்தியை பெருக்குவதாகும். டாக்டர்.வி.குரியன் தேசிய பால்வள மேம்பட்டுக்கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆவார். இக்கழகம் உலகத்திலேயே மிகப்பெரிய பால் உற்பத்தித் திட்டம் (Operation Flood - வெள்ளை நடவடிக்கை) ஒன்றை வடிவமைத்து செயல்படுத்திய பெருமையுடையது.
- டாக்டர்.வி.குரியன் என்பவர் வெண்மை புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- முதல் வெண்மை புரட்சி நடைபெற்ற ஆண்டு - 1970-81
- இரண்டாவது வெண்மை புரட்சி நடைபெற்ற ஆண்டு - 1981-85
- ஆண்டுதோறும் நவம்பர் 26 தேசிய பால் தினமாக (National Milk Day) கொண்டாடபடுகிறது
நீலப் புரட்சி :- Blue Revolution
(மீன்கள் உற்பத்தி)
- மீனவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது மற்றும் இந்தியாவிற்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை அதிகரிக்கச் செய்வது இத்திட்டத்தின் இலக்காகும்
- இந்தியாவின் ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் கொண்டுவரப்பட்டது.
- நீல புரட்சியின் தந்தை டாக்டர் அருண் கிருஷ்ணன், டாக்டர் ஹரிலால் சவுதாரி
கருப்பு புரட்சி :- Black Revolution
(பெட்ரோலியம், நிலக்கரி உற்பத்தி)பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் இந்திய அரசு பெட்ரோலியதுடன் எத்தனாலை கலந்து பயோ டீசலை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
வெள்ளி புரட்சி
(முட்டை உற்பத்தி)
- முட்டை உற்பத்தி வெள்ளி புரட்சி காலத்தில் அபார வளிர்ச்சி அடைந்தது.
- இந்திர காந்தி ஆட்சி காலத்தில் (1969-1978) வெள்ளி புரட்சி ஏற்பட்டது
- வெள்ளி புரட்சியின் தந்தை இந்திரா காந்தி
வெள்ளி இழை புரட்சி :- Silver Fiber Revolution
(பருத்தி உற்பத்தி) ---சிவப்பு புரட்சி :- Red Revolution
(மாமிசம், தக்காளி)
- சிவப்பு புரட்சியின் தந்தை விஷால் திவாரி
வட்ட புரட்சி :- Round Revolution
(உருளைக்கிழங்கு) -----மஞ்சள் புரட்சி :- Yellow Revolution
(எண்ணெய் வித்துக்கள் குறிப்பாக கடுகு மற்றும் சூரியகாந்தி)
- மஞ்சள் புரட்சியின் தந்தை சாம் பிட்ரோடா
இளஞ்சிவப்பு புரட்சி :- Pink Revolution
(இறால், வெங்காயம்)
- இளஞ்சிவப்பு புரட்சியின் தந்தை துர்கேஷ் படேல்
தங்க புரட்சி / பொன் புரட்சி் :- Golden Revolution
(பழங்கள், தேன் மற்றும் தோட்டக்கலைப் பயிர்)
- 1991 முதல் 2003 வரையிலான காலத்தில் நடைபெற்றது.
- தங்க புரட்சியின் தந்தை நிர்பாக் துட்டாஜ்
தங்க இழை புரட்சி / கோல்டன் பைபர் புரட்சி
(சனல் உற்பத்தி) ----சாம்பல் புரட்சி :- Grey Revolution
(உரங்கள்) ----பழுப்புப் புரட்சி :- Brown Revolution
[ தோல், கொக்கோ, மரபுசாரா உற்பத்தி ]
- பழுப்பு புரட்சியின் தந்தை ஹிரலால் சவுத்ரி