இந்திய தலைமை ஆளுநர்கள் வினா விடைகள்

1. சுதந்திர இந்தியவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
A. சர்தார் வல்லபாய் படேல்
B. மவுன்ட் பேட்டன் பிரபு
C. ஜவஹர்லால் நேரு
D. C. ராஜகோபாலாச்சாரி
Answer
B. மவுன்ட் பேட்டன் பிரபு
2. யாருடைய தலைமையில் முதல் பஞ்சக்குழு அமைக்கப்பட்டது?
A. சர் சார்லஸ் வுட்
B. மெக்காலே பிரபு
C. சர் ஹன்டர்
D. சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சீ
Answer
D. சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சீ
3. எத்தனை வயதுக்கு குறைவான குழந்தைகளை தொழிற்சாலைகளில் வேலைக்கு நியமிப்பதை தொழிற்சாலை சட்டம் 1881 தடைசெய்தது?
A. ஐந்து
B. ஏழு
C. பதினொன்று
D. பதினான்கு
Answer
B. ஏழு
4. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபுவால் கருவூலம் எங்கிருந்து மாற்றப்பட்டது?
A. முர்ஷிதாபாத்தில் இருந்து கல்கத்தாவிற்கு
B. கல்கத்தாவில் இருந்து டில்லிக்கு
C. மீரட்டில் இருந்து சிம்லாவிற்கு
D. கான்பூரில் இருந்து முர்ஷிதாபத்திற்கு
Answer
A. முர்ஷிதாபாத்தில் இருந்து கல்கத்தாவிற்கு
5. 1852-ம் ஆண்டு தந்தித் துறையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
A. ஸ்லீமன்
B. ஷாகன்னசே
C. எல்பின்ஸ்டோன்
D. போர்ப்ஸ்
Answer
B. ஷாகன்னசே
6. ஆக்லாந்து பிரபுவுக்கு பின்னர் ஆட்சி பொறுப்பேற்றவர் யார்?
A. ஹார்டிங்
B. எல்லன்பரோ
C. அம்ஹெர்ஸ்ட்
D. ஜார்ஜ் பர்லோ
Answer
B. எல்லன்பரோ
7. வில்லியம் பெண்டிங் பிரபு எல்பின்ஸ்டன் கல்லூரியை எங்கு நிறுவினார்?
A. கல்கத்தா
B. பம்பாய்
C. மதராஸ்
D. மீரட்
Answer
B. பம்பாய்
8. பிண்டாரிகள் தெற்கில் யாருடைய படையினரால் ஒடுக்கப்பட்டனர்?
A. தாமஸ் வாஸ்லாப்
B. கர்னல் அப்டன்
C. ஜேம்ஸ் போர்ப்ஸ்
D. ஜாப் கர்நாக்
Answer
A. தாமஸ் வாஸ்லாப்
9. மதராஸ் நகரை நிறுவியவர் யார்?
A. பிராங்காய் மார்டின்
B. பிரான்சிஸ் டே
C. பிரான்சிஸ் கேரன்
D. ஜாப் சார்நாக்
Answer
B. பிரான்சிஸ் டே
10. பிரிடிஷ் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான உப்பு உரிமை அறிமுகப்படுத்தியவர் யார்?
A. கானிங் பிரபு
B. கர்சன் பிரபு
C. லிட்டன் பிரபு
D. ரிப்பன் பிரபு
Answer
C. லிட்டன் பிரபு
11. ரிப்பன் பிரபுவை இந்திய வைசிராயாக நியமித்தவர் யார்?
A. திஸ்ரேலி
B. பிட்
C. கிளாட்ஸ்டோன்
D. நார்த்
Answer
C. கிளாட்ஸ்டோன்
12. குத்தகை நிலங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் யார்?
A. லின்லித்கோ பிரபு
B. டல்ஹௌசி பிரபு
C. பெண்டிங் பிரபு
D. மவுண்ட் பேட்டன் பிரபு
Answer
C. பெண்டிங் பிரபு
13. இந்தியாவில் முதல் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?
A. 1772
B. 1774
C. 1782
D. 1784
Answer
B. 1774
14. இந்து சமயத்தின் “மார்டின் லூதர்” என்று அழைக்கப்பட்டவர் யார்?
A. ராஜாராம் மோகன் ராய்
B. ராமகிருஷ்ண பரமஹம்சர்
C. தயானந்த சரஸ்வதி
D. மகாதேவ கோவிந்த ரானடே
Answer
C. தயானந்த சரஸ்வதி
15. வில்லியம் பெண்டிங் மெர்காராவை கைப்பற்ற யாரை அனுப்பினார்?
A. கர்னல் அப்டன்
B. கர்னல் பெய்லி
C. கர்னல் லிண்டுசே
D. ஜேம்ஸ் போர்ப்ஸ்
Answer
C. கர்னல் லிண்டுசே
16. 1781-ல் காரன்வாலிஸ் பிரபு எந்த படைகளிடம் சரணடைந்தார்?
A. பிரெஞ்சு
B. டச்சு
C. அமெரிக்க
D. போர்த்துக்கீசிய
Answer
C. அமெரிக்க
17. இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்திய ஆங்கிலேய வைஸ்ராய்
A. கானிங்
B. டல்ஹௌசி
C. லின்லித்கோ
D. லிட்டன்
Answer
C. லின்லித்கோ
18. பொது இராணுவப்பணியாளர் சட்டம் யாரல் கொண்டுவரப்பட்டது?
A. டல்ஹெசி பிரபு
B. வில்லியம் பெண்டிங் பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. கானிங் பிரபு
Answer
D. கானிங் பிரபு
19. ‘காரன்வாலிஸ் சட்ட தொகுப்பினை’ தொகுத்து வெளியிட்டவர் யார்
A. சர் ஜான் ஷோர்
B. சர் ஜார்ஜ் பார்லோ
C. சர் கிரேகரி வில்சன்
D. சர் தாமஸ் மன்றோ
Answer
B. சர் ஜார்ஜ் பார்லோ
20. சர் ஜான் ஷோர் எதை பின்பற்றினார்?
A. தலையீடாக் கொள்கை
B. ஆக்கிரமிப்புக் கொள்கை
C. விரிவாக்கக் கொள்கை
D. தாராளமயக் கொள்கை
Answer
A. தலையீடாக் கொள்கை
21. பால்கன் திட்டத்தை வெளியிட்டவர் யார்?
A. அட்லி
B. ஸ்டாபோர்டு கிரிப்ஸ்
C. பெத்விக் லாரான்ஸ்
D. மெளன்ட் பேட்டன் பிரபு
Answer
D. மெளன்ட் பேட்டன் பிரபு
22. பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக டில்லி எப்போது அறிவிக்கப்பட்டது?
A. 1858
B. 1911
C. 1935
D. 1947
Answer
B. 1911
23. அகில இந்திய குடிமைப் பணிகளின் தந்தை எண்டு அழைக்கபடுபவர் யார்?
A. கார்ன்வாலிஸ் பிரபு
B. மக்காலே பிரபு
C. சர்தார் வல்லபாய் படேல்
D. ஜவகர்லால் நேரு
Answer
C. சர்தார் வல்லபாய் படேல்
24. தவறாக பொருந்தியுள்ள இணையை கண்டறிக
  (முக்கிய நிகழ்வுகள்) (அப்பொழுது வைஸ்ராய்)
A. காங்கிரஸ் தோற்றம் டப்ரின்
B. ஜாலியன் வாலாபாக் படுகொலை செம்ஸ்போர்டு
C. சைமன் துதுக் குழுவின் வருகை வில்லிங்டன்
D. அமைச்சரவை துதுக்குழுவின் வருகை வேவல்
Answer
C. சைமன் துதுக் குழுவின் வருகை - வில்லிங்டன்
25. இந்தியாவின் வைசிராயாக மௌன்டபேட்டன் பிரபு எப்பொழுது நியமிக்கப்பட்டார்?
A. 20 பிப்ரவரி, 1947
B. 3 ஜுன், 1947
C. 24 மார்ச், 1947
D. 2 செப்டம்பர், 1947
Answer
C. 24 மார்ச், 1947
26. காரன்வாலிஸ் பிரபுவின் மேற்பார்வையில் நீதித்துறை சீர்திருத்தத்தை வங்காளத்தில் அறிமுகபடுத்தியவர் யார்?
A. சர் ஜான் ஷோர்
B. சர் ஜேம்ஸ் கிராண்ட்
C. சர் எலிஜா இம்பே
D. சர் வில்லியம் ஜோன்ஸ்
Answer
D. சர் வில்லியம் ஜோன்ஸ்
27. காரன்வாலிஸ் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபொழுது கிழக்கிந்திய வணிகக் குழுவில் காணப்பட்ட முறைகேடுகளையும் ஊழல் நடவடிக்கைகளையும் ஒழித்தவர் யார்?
A. சர் வில்லியம் ஜோன்ஸ்
B. சர் ஜான் ஷோர்
C. ஜேம்ஸ் கிராண்ட்
D. சார்லஸ் கிராண்ட்
Answer
D. சார்லஸ் கிராண்ட்
28. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
A. ஹேஸ்டிங்க்ஸ் பிரபுவை தொடர்ந்து வில்லியம் பெண்டிங் பிரபு ஆட்சிப்பொறுப்பு ஏற்றார்
B. சென்னை மாகாணத்தில் சர் தாமஸ் மன்றோ அறிமுகப்படுத்திய ரயத்வாரி முறையை ஹேஸ்டிங்ஸ் அங்கீகரித்தார்
C. ஹேஸ்டிங்ஸ் பிரபு சென்னை மாகாணத்தை உருவாக்கியவர் என்று போற்றப்பட்டார்
D. 1820ல் ‘சமாச்சார் தர்பன்’ என்ற வங்கமொழி வார இதழ் தோற்றுவிக்கப்பட்டது
Answer
B. சென்னை மாகாணத்தில் சர் தாமஸ் மன்றோ அறிமுகப்படுத்திய ரயத்வாரி முறையை ஹேஸ்டிங்ஸ் அங்கீகரித்தார்
29. வேலூர் கலகம் எந்த தலைமை ஆளுநரின் ஆட்சிகாலத்தில் நடைபெற்றது?
A. வெல்லஸ்லி பிரபு
B. சர் ஜார்ஜ் பார்லோ
C. மின்டோ பிரபு
D. ஹேஸ்டிங்க்ஸ் பிரபு
Answer
B. சர் ஜார்ஜ் பார்லோ
30. வங்காளத்தில் நிரந்திர நிலவரித்திட்டத்தை அறிமுகபடுதியவர் யார்?
A. வாரன் ஹேஸ்டிங்க்ஸ்
B. காரன் வாலிஸ்
C. டல்ஹெளசி
D. வில்லிலியம் பெண்டிங்
Answer
B. காரன் வாலிஸ்
31. 1798 ம் ஆண்டு துணைப்படைத் திட்டம் என்ற முறையை ஹெதராபாத்தில் அறிமுகப்படுத்தியவர்
A. வாரன் ஹேஸ்டிங்க்ஸ்
B. காரன் வாலிஸ் பிரபு
C. வெல்லஸ்லி பிரபு
D. டல்ஹெளசி பிரபு
Answer
C. வெல்லஸ்லி பிரபு
32. இந்திய ஆட்சிப்பணியின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்?
A. காரன்வாலிஸ் பிரபு
B. கானிங் பிரபு
C. கர்சன் பிரபு
D. டல்ஹெளசி பிரபு
Answer
A. காரன்வாலிஸ் பிரபு
33. வில்லியம் பெண்டிங் பிரபு பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தேடு
A. இவரின் பதவிக் காலத்தின் பொழுது ஆண்டு பட்டயச் சட்டம் 1833 ஆனது இயற்றப்பட்டது.
B. பெண்டிங் பிரபு இந்தியாவின் முதல் தலைமை ஆளுனர் ஆவார்
C. இராணுவத்துறையிலிருந்த இரட்டைப்படி (பேட்டா) முறையை ஒழித்தார்
D. கீழ்மட்ட நீதிமன்றங்களில் ஆங்கிலத்தையும் மற்றும் உயர்மட்ட நீதிமன்றங்களில் பாரசீக மொழிக்குப் பதிலாக வட்டார மொழிகளை அறிமுகப்படுத்தினார்
Answer
D. கீழ்மட்ட நீதிமன்றங்களில் ஆங்கிலத்தையும் மற்றும் உயர்மட்ட நீதிமன்றங்களில் பாரசீக மொழிக்குப் பதிலாக வட்டார மொழிகளை அறிமுகப்படுத்தினார்
34. சிப்பாய் கலகத்தின் போது இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தவர்
A. டல்ஹெளசி பிரபு
B. கானிங் பிரபு
C. கர்சன் பிரபு
D. இர்வின் பிரபு
Answer
B. கானிங் பிரபு
35. தவறான கூற்றைக் கண்டுபிடி
A. 1858 நவம்பர் 1ஆம் நாள் பேரரசியின் அறிக்கைப்படி இந்திய நிர்வாகத்தை கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டன் அரசர்ஃஅரசி ஏற்றுக்கொண்டது.
B. கானிங் பிரபு பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர் ஆவார்
C. ரிப்பன் பிரபு 1858ம் ஆண்டுச் சட்டப்படி முதல் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்
D. பேரரசியின் அறிக்கை (1858) இந்திய மக்களின் “மேக்னா கார்ட்டா” (உரிமை சாசனம்) என்று அழைக்கப்படுகிறது
Answer
C. ரிப்பன் பிரபு 1858ம் ஆண்டுச் சட்டப்படி முதல் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்
36. கான்ங் பிரபுவால், பேரரசியின் அறிக்கை அறிவிப்பு செய்யப்பட்ட இடம்
A. ஆக்ரா
B. அலகாபாத்
C. லக்னோ
D. டெல்லி
Answer
B. அலகாபாத்
37. முதலாவது பஞ்சக் குழுவின் தலைவர்
A. கிட்ச்னர் பிரபு
B. சர் ஆண்ட்ரூ பிரேசர்
C. சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி
D. லிட்டன் பிரபு
Answer
C. சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி
38. நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை நீக்கியவர் யார்?
A. லிட்டன் பிரபு
B. ரிப்பன் பிரபு
C. கர்சன் பிரபு
D. மின்டோ பிரபு
Answer
B. ரிப்பன் பிரபு
39. சர் வில்லியம் ஹண்டர் குழு என்பது எதனுடன் தொடர்புடையது?
A. கல்வி சீர்திருத்தங்கள்
B. நிதித்துறை சீர்திருத்தங்கள்
C. வேளாண்மை சீர்திருத்தங்கள்
D. நீதித்துறை சீர்திருத்தங்கள்
Answer
A. கல்வி சீர்திருத்தங்கள்
40. தல சுயாட்சி முறையானது (உள்ளாட்சி அமைப்புகள்) இந்தியாவில் உருவாக அடித்தளம் அமைத்தவர் யார்?
A. ரிப்பன் பிரபு
B. வில்லியம் பெண்டிங் பிரபு
C. டல்ஹெளசி பிரபு
D. கர்சன் பிரபு
Answer
A. ரிப்பன் பிரபு
41. 1904 ஆம் ஆண்டு பண்டைய தொல்பொருள் சின்னங்கள் சட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?
A. ரிப்பன் பிரபு
B. லிட்டன் பிரபு
C. கர்சன் பிரபு
D. மின்டோ பிரபு
Answer
C. கர்சன் பிரபு
42. வெல்லெஸ்லியின் துணைப்படைத்திடத்தில் இணைத்த முதல் சமஸ்தானம் எது?
A. சதாரா
B. ஜான்சி
C. ஹைதராபாத்
D. நாக்பூர்
Answer
C. ஹைதராபாத்
43. 1973 இல் "காரன் வாலிஸ் சட்டத் தொகுப்பை" தொகுத்தவர் யார்?
A. நந்த குமார்
B. சர் ஜான் பார்லோ
C. சர் எலிஜா இம்பே
D. இராபர்ட் கிளைவ்
Answer
B. சர் ஜான் பார்லோ
44. வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தியவர் யார்?
A. வாரன் ஹேஸ்டிங்ஸ்
B. காரன் வாலிஸ்
C. இராபர்ட் கிளைவ்
D. மார்குவிஸ் ஹாஸ்டிங்க்ஸ்
Answer
C. இராபர்ட் கிளைவ்
45. தலைமை ஆளுநரின் நிர்வாக குழுவில் நியமிக்கப்பட்ட முதல் சட்ட உறுப்பினர் யார்?
A. வில்லியம் பெண்டிங்
B. மெக்காலே பிரபு
C. கானிங் பிரபு
D. தாதாபாய் நௌரோஜி
Answer
B. மெக்காலே பிரபு
46. சார்லஸ் உட் அறிக்கை (1854) என்பதுடன் தொடர்புடையது
A. சமூக சீர்திருத்தம்
B. கல்வி சீர்திருத்தம்
C. நிர்வாக சீர்திருத்தம்
D. பெண்களுக்கு அதிகாரமளித்தல்
Answer
B. கல்வி சீர்திருத்தம்
47. கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை மாகாணங்களில் ஒரே மாதிரியான நிர்வாக அமைப்பை அறிமுகப்படுத்தியவர் யார்?
A. வில்லியம் பெண்டிங்
B. கானிங் பிரபு
C. வாரன் ஹேஸ்டிங்ஸ்
D. டல்ஹெளசி பிரபு
Answer
D. டல்ஹெளசி பிரபு
48. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
A. வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ்
B. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங்
C. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் வைஸ்ராய் கானிங் பிரபு
D. பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர் மௌன்ட்பேட்டன்
Answer
D. பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர் - மௌன்ட்பேட்டன்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்