தண்டி யாத்திரை
- தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட இடம் குஜராத்திலுள்ள சபர்மதி ஆசிரமம்
- பயணம் தொடங்கிய நாள் மார்ச் 12, 1930
- தண்டி யாத்திரையின் போது காந்திக்கு வயது 61
- 1929 டிசம்பர் 31 ல் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சட்ட மறுப்பு இயக்கம் காந்தியடிகள் தலைமையில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
- காந்தியடிகள் தனது உப்பு சத்தியாகிரகம் தொடர்பான தனது திட்டத்தை இர்வின் பிரபுவிடம் 2 மார்ச் 1930 -ல் கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தை அறிவித்தார்
- அனைவருக்கும் அவசியமான பொருளான உப்பு மீது அநியாய வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த ஆர்பாட்டம் இதுவாகும். யாத்திரையின் போது காந்திஜி 12 மார்ச் 1930 ல் தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து கிளம்பி குஜராத்தின் கிரமங்களின் வழியாக நடைபயணம் மேற்கொண்டு கடற்கறையை அடைந்து கடல்நீரிலிருந்து உப்பு தயாரித்து ஆங்கில அரசாங்கத்தின் உப்பு சட்டத்தை மீறுவது என திட்டமிடப்பட்டது
- காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத் கடற்கரை ஓரம் உள்ள தண்டி வரை 375 கிலோமீட்டர் தொலைவிற்கு யாத்திரை நடைபெற இருந்தது.
- அதன்படி 1930 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி 80 தொண்டர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி நோக்கி பயணம் தொடங்கியது
- சபர்மதி ஆசிரமத்திலிருந்து யாத்திரையில் ஆயிரக்கணக்காக மக்கள்; இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்றனர். காந்திஜி யாத்திரையிண் ஒவ்வொரு நாள் முடிவிலும் ஆங்கில அரசாங்கத்தையும், அதன் உப்பு சட்டத்தை எதிர்த்தும் பேருரையாற்றினார்.
- காந்திஜியின் யாத்திரையில் சரோஜினி நாயுடு பங்கேற்றார். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரையில் பங்கேற்றனர்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்