எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஓன்றைத் தேர்ந்தெழுதுதல் வினா விடைகள்

1. "இறந்தார் இறந்தா ரனையர் சினத்தை“ - இதில் அமைந்துள்ள எதுகை
A. முற்று எதுகை
B. இணை எதுகை
C. பொழிப்பு எதுகை
D. அடி எதுகை
Answer
B. இணை எதுகை
2. "கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்" - இதில் அமைந்துள்ள எதுகை
A. கீழ்க்கதுவாய்
B. பொழிப்பு எதுகை
C. சீர் எதுகை
D. இணை எதுகை
Answer
A. கீழ்க்கதுவாய்
3. "அருவிய முருகிய மார்ப்பப் பைங்கிளி" - இதில் எதுகையைக் காண்
A. அருவிய - முருகிய
B. முருகிய - பைங்கிளி
C. அருவிய - பைங்கிளி
D. முருகிய - மார்ப்பப்
Answer
A. அருவிய - முருகிய
4. "கொல்லிமலை எனக்கினைய செல்லிமலை யம்மே! - எதுகைத் தொடை காண்
A. கொல்லிமலை - எனக்கினைய
B. செல்லிமலை - யம்மே!
C. எனக்கினைய - செல்லிமலை
D. கொல்லிமலை - செல்லிமலை
Answer
D. கொல்லிமலை - செல்லிமலை
5. "அந்தணர்கள் அதிசயித்தார் அருமுனிவர் துதிசெய்தார்" - இப்பாடலடியில் அமைந்துள்ள மோனை வகை யாது?
A. இணை மோனை
B. முற்று மோனை
C. ஒரூஉ மோனை
D. கூழை மோனை
Answer
D. கூழை மோனை
6. ”ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு “
A. ஊணுடை - உயிர்க்கெல்லாம்
B. எச்சம் - சிறப்பு
C. ஊணுடை - மாந்தர்
D. ஊணுடை - நாணுடைமை
Answer
D. ஊணுடை - நாணுடைமை
7. "அண்டரும் மண்ணுள்ளோரும்“ என்பது
A. அடி எதுகை
B. அடி இயைபு
C. முரண் தொடை
D. சீர் அளபெடை
Answer
C. முரண் தொடை
8. பயின்று வந்துள்ள தொடைவகையைத் தேர்க. "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்"
A. எதுகை
B. மோனை
C. இயைபு
D. முரண்
Answer
D. முரண்
9. "சோறு மணக்கும் மடங்களெலாம் தூய்மை மணக்கும் சிந்தையெலாம்" - அடி இயைபு கண்டறிக
A. சோறு - மடங்களெலாம்
B. தூய்மை - சிந்தை
C. மணக்கும் - மடங்களெலாம்
D. மடங்களெலாம் - சிந்தையெலாம்
Answer
D. மடங்களெலாம் - சிந்தையெலாம்
10. "வானவர்கள் மலர்மாரி மண்ணிறைய விண்ணுலகின்" - இப்பாடலடியில் அமைந்துள்ள முரண்தொடையின் வகை யாது ?
A. இணை முரண்
B. மேற்கதுவாய் முரண்
C. கீழ்க்கதுவாய் முரண்
D. முற்று முரண்
Answer
B. மேற்கதுவாய் முரண்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்