வேதியியல் வினா விடைகள்

1. இரும்பு துருபிடித்தல்
A. ஆக்சிஜனேற்ற வினை
B. ஒடுக்க வினை
C. ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை
D. எதுவுமில்லை
Answer
A. ஆக்சிஜனேற்ற வினை
2. உலர் சலவைத்தூளில் அடங்கி உள்ளது
A. சோடியம் சிலிக்கேட்
B. பொட்டாசியம் சிலிக்கேட்
C. மக்னீசியம் சிலிக்கேட்
D. இரும்பு சிலிக்கேட்
Answer
A. சோடியம் சிலிக்கேட்
3. சிமெண்ட் தொழிலில் பயன்படும் முக்கியமான மூலப்பொருட்கள்
A. சுண்ணாம்புக்கல்
B. ஜிப்சம் மற்றும் களிமண்
C. களிமண்
D. சுண்ணாம்புக்கல் மற்றும் களிமண்
Answer
D. சுண்ணாம்புக்கல் மற்றும் களிமண்
4. கரிமச்சேர்மங்களில் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை நிர்ணயிக்கும் அணுக்களின் தொகுதி ____________ எனப்படும்
A. ஹைட்ரோ கார்பன்கள்
B. வினைச்செயல் மாற்றியம்
C. வினைச்செயல் தொகுதி
D. வினைச்செயல் அணுக்கள்
Answer
C. வினைச்செயல் தொகுதி
5. காற்றில்லா சுவாசித்தலின்போது குளுக்கோஸின் சுவாச ஈவு முடிவிலியாக உள்ளது; காரணம் கூறுக.
A. CO2 வெளியிடப்படுகிறது; ஆனால் O2 பயன்படுத்தப்படுவதில்லை.
B. CO2 மற்றும் O2 பயன்படுத்தப்படுகிறது.
C. CO2 மற்றும் O2 வெளியேற்றப்படுகிறது.
D. CO2 மற்றும் பயன்படுத்தப்படுகிறது.
Answer
A. CO2 வெளியிடப்படுகிறது; ஆனால் O2 பயன்படுத்தப்படுவதில்லை.
6. ரேடியோ கார்பன் இயற்கையில் இவ்வாறு உற்பத்தியாகிறது
A. கார்பனுடன் UV கதிர்கள் வினைபுரிவதால்
B. கார்பனுடன் IR கதிர்கள் வினைபுரிவதால்
C. பூமியிலுள்ள நைட்ரஜனுடன் காஸ்மிக் கதிர்கள் வினைபுரிவதால்
D. கார்பனுடன் X கதிர்கள் வினைபுரிவதால்
Answer
C. பூமியிலுள்ள நைட்ரஜனுடன் காஸ்மிக் கதிர்கள் வினைபுரிவதால்
7. எலக்ட்ரானின் இரட்டைப் பண்பை விளக்கியவர்
A. போர்
B. ஹீசன் பெர்க்
C. டிபிராக்லீ
D. பௌலி
Answer
C. டிபிராக்லீ
8. குளுக்கோசின் நொதித்தல் வினையின்போது இறுதியாகக் கிடைக்கும் பொருள்
A. CO2 மற்றும் CH2OH
B. CO2 மற்றும் ஆல்கஹால்
C. CO2 மற்றும் H2O
D. CO2 மற்றும் C2H5OH
Answer
D. CO2 மற்றும் C2H5OH
9. நிலவின் பரப்பில் காணப்படும் தனிமம்
A. தகரம்
B. டங்ஸ்டன்
C. டான்டுலம்
D. டைட்டானியம்
Answer
D. டைட்டானியம்
10. எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம் எது?
A. கால்சியம் கார்பனேட்
B. கால்சியம் பாஸ்பேட்
C. கால்சியம் குளோரைடு
D. கால்சியம் சல்பேட்
Answer
B. கால்சியம் பாஸ்பேட்
11. கரிம பாஸ்பரஸ் பூச்சிக்கொல்லி அல்லாத ஒரு சேர்மம் எது?
A. டையாஜினான்
B. மாலத்தியான்
C. கார்பாரில்
D. குளோரோபைரிபாஸ்
Answer
C. கார்பாரில்
12. ஹாலஜனிடை அமிலங்களின் அமிலத்தன்மையை கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.
A. HCI > HBr > HF > HI
B. HI > HBr > HCI > HF
C. HI > HF > HBr > HCI
D. HCI > HI > HF > HBr
Answer
B. HI > HBr > HCI > HF
13. செயற்கை ரப்பர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மோனோமர் எது?
A. 1, 3 -பியூட்டாடையின்
B. அக்ரிலோநைட்ரைல்
C. வினைல் குளோரைடு
D. புரப்பிலின்
Answer
A. 1, 3 -பியூட்டாடையின்
14. ஒரு கரைசலின் Ph 4.0 எனில் அக்கரைசல்
A. சிவப்பு லிட்மசை நீல நிறமாக்கும்
B. நீல லிட்மசை சிவப்பு நிறமாக்கும்
C. சிவப்பு லிட்மசை சிவப்பாகவே வைத்திருக்கும்
D. நீல லிட்மசை நீலமாகவே வைத்திருக்கும்
Answer
B. நீல லிட்மசை சிவப்பு நிறமாக்கும்
15. ஆஸ்திரேலியாவில் 2014 – ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய கனிமம்
A. பர்புரைட்
B. பெட்சைட்
C. புட்னிசைட்
D. பைரோப்
Answer
C. புட்னிசைட்
16. ஆக்சாலிக் அமிலத்தை சோடியம் ஹைட்ராக்சைடுடன் தரம் பார்க்கும்போது பயன்படுத்தப்படும் நிறங்காட்டி
A. பொட்டாசியம் பெர்மாங்கனேட்
B. பினாப்தலீன்
C. லிட்மஸ்
D. மெத்தில் ஆரஞ்சு
Answer
B. பினாப்தலீன்
17. ஆஸ்வால்ட் முறையில் தயாரிக்கப்படுவது எது?
A. கந்தக அமிலம்
B. அமோனியா
C. நைட்ரிக் அமிலம்
D. அசிட்டிக் அமிலம்
Answer
C. நைட்ரிக் அமிலம்
18. சாதாரண உப்பின் உருகுநிலை
A. 54° C
B. 80° C
C. 801° C
D. 135° C
Answer
D.
19. எந்திரங்களில் உயர்வுப் பொருளாக பயன்படுவது எது
A. கிராபைட்
B. வைரம்
C. நிலக்கரி
D. எதுவுமில்லை
Answer
A. கிராபைட்
20. துருப்பிடிக்காத எஃகில் காணப்படுவது எது?
A. தாமிரம், நிக்கல்
B. குரோமியம், நிக்கல்
C. அலுமினியம், நிக்கல்
D. துத்தநாகம், நிக்கல்
Answer
B. குரோமியம், நிக்கல்
21. புவியின் பரப்பில் அதிகமாகக் காணப்படும் உலோகம்
A. புவியின் பரப்பில் அதிகமாகக் காணப்படும் உலோகம்
B. தாமிரம்
C. அலுமினியம்
D. இரும்பு
Answer
C. அலுமினியம்
22. சமையல் வாயு என்பது எதன் கலவை?
A. கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டையாக்சைடு
B. பியூட்டேன் மற்றும் புரோப்பேன்
C. மீத்தேன் மற்றும் எத்திலின்
D. கார்பன் டையாக்சைடு மற்றும் ஆக்சிஜன்
Answer
B. பியூட்டேன் மற்றும் புரோப்பேன்
23. இயற்கையான கிடைக்காமல் செயற்கையாக தயாரிக்கப்படும் தனிமம்
A. தோரியம்
B. ரேடியம்
C. புளூட்டோனியம்
D. யுரேனியம்
Answer
C. புளூட்டோனியம்
24. மாநகராட்சிக் குழாயில் விநியோகிக்கப்படும் குடிதண்ணீரில் குளோரின் மனத்திற்குக் காரணமான வேதிப்பொருள்
A. CaCI2
B. CaOCI2
C. HCL
D. NaCI
Answer
B. CaOCI2
25. பிளாஸ்டர் ஆஃப் பாரீசின் இறுகும் தன்மைக்குக் காரணம்
A. நீர் வெளியேற்றம்
B. ஈரப்படுத்துதல் மூலம் ஹைட்ரேட்டுகள் உருவாதல்
C. ஆக்சிகரணம்
D. வெப்பப்படுத்துவதன் மூலம் ஹைட்ரேட்டுகள் உருவாதல்
Answer
A. நீர் வெளியேற்றம்
26. தொழிற்சாலைகளில் புகை சுத்திகரிக்கப்படுதல் எதன் மூலம் நடைபெறுகிறது?
A. மின்னாற் வீழ்படிவாக்கி
B. மின் வடிகட்டி
C. மேற்கண்ட இரண்டும்
D. எதுவுமில்லை
Answer
A. மின்னாற் வீழ்படிவாக்கி
27. கண்ணாடியுடன் எளிதில் வினைபுரியக் கூடியது
A. ஹைட்ரோ குளோரிக் அமிலம்
B. ஹைட்ரோ புளோரிக் அமிலம்
C. நைட்ரிக் அமிலம்
D. சிட்ரிக் அமிலம்
Answer
B. ஹைட்ரோ புளோரிக் அமிலம்
28. சிரிப்பை வரவழைக்கும் வாயு
A. நைட்ரிக் ஆக்சைடு
B. நைட்ரஸ் ஆக்சைடு
C. துத்தநாக ஆக்சைடு
D. தாமிர ஆக்சைடு
Answer
B. நைட்ரஸ் ஆக்சைடு
29. குறைந்த கொதிநிலை வேறுபாடு கொண்ட ஒன்றுடன் ஒன்று கலக்கும் தன்மையுள்ள இரு திரவங்களைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை ______
A. பின்ன காய்ச்சி வடித்தல்
B. பதங்கமாதல்
C. எளிய காய்ச்சி வடித்தல்
D. நீராவியால் காய்ச்சி வடித்தல்
Answer
A. பின்ன காய்ச்சி வடித்தல்
30. புரதங்களை முழுவதுமாக நீராற் பகுக்கும்போது கிடைப்பது
A. அனிலின்
B. அலிபாடிக் அமிலம்
C. அமினோ அமிலம்
D. அரோமடிக் அமிலம்
Answer
C. அமினோ அமிலம்
31. HCIO, HCIO2, HCIO3 மற்றும் HCIO4 ஆகிய சேர்மங்களின் அமிலத் தன்மையின் சரியான ஏறு வரிசை
A. HCIO < HCIO2 < HCIO3 < HCIO4
B. HCIO2 < HCIO < HCIO3 < HCIO4
C. HCIO3 < HCIO4 < HCIO2 < HCIO
D. HCIO4 < HCIO2 < HCIO3 < HCIO
Answer
A. HCIO < HCIO2 < HCIO3 < HCIO4
32. கீழ்கண்டவற்றுள் எந்த உலோகம் தனித்த நிலையில் இயற்கையாக கிடைக்கின்றது?
A. Au
B. Na
C. Pb
D. U
Answer
A. Au
33. ‘கேட்டினேஷன்’ என்ற பண்பைப் பெற்றுள்ள அலோகம் எது?
A. கார்பன்
B. சல்பர்
C. ஹைட்ரஜன்
D. புரோமின்
Answer
A. கார்பன்
34. “அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது “ – இக்கருத்து பின்வருவனவற்றில் அடங்கியுள்ளது.
A. டால்டன் அணு மாதிரி
B. ஜெ. ஜெ. தாம்சன் மாதிரி
C. போர் மாதிரி
D. எதுவுமில்லை
Answer
A. டால்டன் அணு மாதிரி
35. தொலைபேசிக் கம்பிகள் தயாரிக்க உதவுவது எது?
A. பித்தளை
B. சிலிகோ வெண்கலம்
C. டியூராலுமினியம்
D. வெண்கலம்
Answer
B. சிலிகோ வெண்கலம்
36. பின்வரும் உரங்களில் எது அதிக அளவு நைட்ரஜனை பெற்றுள்ளது?
A. யூரியா
B. அமோனியம் நைட்ரேட்டு
C. பொட்டாசியம் நைட்ரேட்டு
D. அமோனியம் பாஸ்பேட்டு
Answer
A. யூரியா
37. அவகாட்ரோ விதி பொருந்துவது?
A. திண்மங்களுக்கு
B. திண்மங்கள் மற்றும் திரவங்களுக்கு
C. வாயுக்கள் மற்றும் திரவங்களுக்கு
D. வாயுக்களுக்கு
Answer
D. வாயுக்களுக்கு
38. அசிட்டைல் சாலிசிலிக் அமிலமான _____________ ஆக பயன்படுத்தப்படுகிறது.
A. வலிநிவாரணி
B. மயக்க மருந்து
C. உரம்
D. கண்ணீர்ப் புகை வாயு
Answer
A. வலிநிவாரணி
39. தனிம வரிசை அட்டவணையைக் கொடுத்தவர்
A. ஃபாரடே
B. மெண்டலீப்
C. அரீனியஸ்
D. லவாய்சியர்
Answer
B. மெண்டலீப்
40. அறை வெப்பநிலையில் திரவ நிலையில் உள்ள அலோகம்
A. Hg
B. Na
C. Cl2
D. Br2
Answer
D. Br2
41. அசிட்டிலீனில் உள்ள பிணைப்புகள்
A. 3 பை, 2 சிக்மா பிணைப்புகள்
B. 2 பை, 3 சிக்மா பிணைப்புகள்
C. 4 பை, 1 சிக்மா பிணைப்புகள்
D. 1 பை, 4 சிக்மா பிணைப்புகள்
Answer
B. 2 பை, 3 சிக்மா பிணைப்புகள்
42. மருத்துவமனையில் சுவாசத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் குழாய்களில் கலந்துள்ள வாயு ஆக்சிஜன் மற்றும்
A. நைட்ரஜன்
B. ஹீலியம்
C. ஆர்கான்
D. கார்பன் டையாக்சைடு
Answer
A. நைட்ரஜன்
43. பழங்களைக் கனியவைக்கப் பயன்படும் வாயு
A. மீத்தேன்
B. எத்திலீன்
C. அசிட்டிலீன்
D. எதுவுமில்லை
Answer
B. எத்திலீன்
44. வெப்பநிலை தனி பூஜ்ஜியம் என்பது
A. நீர் பனிக்கட்டியாதல்
B. அனைத்து பொருள்களும் திட நிலையாதல்
C. ஒரு பொருளில் உள்ள அனைத்து துகள்களும் ஓய்வு நிலைக்கு வருதல்
D. நீர் ஆவியாதல்
Answer
C. ஒரு பொருளில் உள்ள அனைத்து துகள்களும் ஓய்வு நிலைக்கு வருதல்
45. எண்ணெய் மற்றும் கொழுப்புகளைக் கரைப்பதற்கு உதவும் கரைப்பான்
A. நாப்தலீன்
B. பென்சீன்
C. வளைய ஹெக்சேன்
D. பியூட்டேன்
Answer
B. பென்சீன்
46. கீழ்க்கண்டவற்றில் குறைந்த உறைநிலை கொண்ட ௦.1 M நீர்க் கரைசல்
A. பொட்டாசியம் சல்பேட்
B. சோடியம் குளோரைடு
C. யூரியா
D. குளுக்கோஸ்
Answer
A. பொட்டாசியம் சல்பேட்
47. கார உலோகங்களில் மிக வீரியமிக்க ஆக்சிஜன் ஒடுக்கியாகச் செயல்படும் உலோகம் எது?
A. K
B. Na
C. Cs
D. Li
Answer
D. Li
48. மருந்தாகப் பயன்படும் எஸ்டர்
A. எத்தில் அசிடேட்
B. மெத்தில் சாலிசிலேட்
C. எத்தில் பென்சோயேட்
D. மெத்தில் பென்சோயேட்
Answer
B. மெத்தில் சாலிசிலேட்
49. தாஜ்மஹால் மங்கலாக மாறக் காரணம்
A. SO2
B. N2
C. CO
D. CO2
Answer
A. SO2
50. சாண வாயுவின் முக்கிய பகுதி பொருள்
A. CO2
B. CH4
C. O2
D. N2
Answer
B. CH4
51. சோப்பில் காணப்படும் அமிலம்
A. கார்பாக்சிலிக் அமிலம்
B. சல்போனிக் அமிலம்
C. அசிட்டிக் அமிலம்
D. ஹைட்ரோ குளோரிக் அமிலம்
Answer
A. கார்பாக்சிலிக் அமிலம்
52. சமையல் வாயு என்பது எதன் கலவை?
A. கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டையாக்சைடு
B. பியூட்டேன் மற்றும் புரோப்பேன்
C. மீத்தேன் மற்றும் எத்திலின்
D. கார்பன் டையாக்சைடு மற்றும் ஆக்சிஜன்
Answer
B. பியூட்டேன் மற்றும் புரோப்பேன்
53. தேசிய வேதியியல் கூடம் நிறுவப்பட்டுள்ள இடம்
A. பூனா
B. டெல்லி
C. கொல்கத்தா
D. லக்னோ
Answer
A. பூனா
54. குளிர்விப்பானாக பயன்படும் ப்ரீயானில் உள்ள தனிமங்கள்
A. C, N, F, O
B. C, F, CI
C. C, CI, Br
D. C, N, O
Answer
B. C, F, CI
55. கரும்புச் சக்கைக் கூழை ஈஸ்டால் நொதிக்கு உட்படுத்தும்போது கிடைக்கும் இறுதி விளை பொருள்
A. பைருவேட்
B. பீனால்
C. லேக்டிக் அமிலம்
D. எத்தில் ஆல்கஹால்
Answer
D. எத்தில் ஆல்கஹால்
56. காடி நீரில் (வினிகர்) உள்ள முக்கிய அமிலம்
A. ஃபார்மிக் அமிலம்
B. அசிட்டிக் அமிலம்
C. சாலிசிலிக் அமிலம்
D. ஆக்சாலிக் அமிலம்
Answer
B. அசிட்டிக் அமிலம்
57. ரசக்கலவை என்பது
A. உலோகம் மற்றும் மெர்க்குரி
B. அலோகம் மற்றும் குளோரின்
C. உலோகம் மற்றும் காரீயம்
D. அலோகம் மற்றும் மெர்க்குரி
Answer
A. உலோகம் மற்றும் மெர்க்குரி
58. எது கடின நிலக்கரி என அழைக்கப்படுகிறது?
A. பிட்
B. லிக்னைட்
C. பிட்டுமனஸ்
D. ஆந்தரசைட்
Answer
D. ஆந்தரசைட்
59. நியுக்ளியான்கள் என்பது
A. புரோட்டான் + எலெக்ட்ரான்
B. புரோட்டான் + நியூட்ரான்
C. எலெக்ட்ரான் + நியூட்ரான்
D. பாசிட்ரான் + எலெக்ட்ரான்
Answer
B. புரோட்டான் + நியூட்ரான்
60. இல்ஃபிரமைட் என்பது கீழ் கொடுக்கப்பட்டுள்ள எந்த உலோகத்தின் தாது?
A. டான்டலம்
B. மாலிபிடினம்
C. குரோமியம்
D. டங்க்ஸ்டன்
Answer
D. டங்க்ஸ்டன்
61. காற்று என்பது ஒரு
A. சேர்மம்
B. தனிமம்
C. கலவை
D. மின்பகுளி
Answer
C. கலவை
62. f – மட்டம் ஏற்கும் அதிகபட்ச ஆர்பிட்டால்களின் எண்ணிக்கை
A. 3
B. 2
C. 5
D. 14
Answer
D. 14
63. கீழ்க்கண்டவற்றுள் எந்த நிலக்கரி மென்நிலக்கரி என அழைக்கபடுகிறது?
A. பீட்
B. லிக்னைட்
C. பிட்டுமினஸ்
D. ஆந்திரசைட்
Answer
C. பிட்டுமினஸ்
66. தவறாக பொருந்தியுள்ள இனையைக் கண்டறிக்க
  (வாயுக்கள்) (பலன்கள்)
A. செனான் அதிக ஒளிரக்கூடிய விளக்குகள்
B. கிரிப்டான் ஒளிரும் விளக்குகள்
C. நியான் விளம்பர பலகை எழுத்துக்கள்
D. ஹீலியம் சர்ஜிக்கல் இம்பிளான்ட்
Answer
D. ஹீலியம் – சர்ஜிக்கல் இம்பிளான்ட்
64. கீழ்க்கண்ட எந்தத் தனிமத்தின் பெயர், கடவுளின் பெயர் மற்றும் புராணக் கதாப்பாத்திரத்தை கொண்டு பெயரிடப்பட்டுள்ளது
A. அர்ஜென்டம்
B. ஹைட்ரார்ஜிரம்
C. உல்ஃபரம்
D. மெக்னீசியம்
Answer
B. ஹைட்ரார்ஜிரம்
65. கீழ்க்கண்ட எந்த வருடத்தில் ஜான் டால்டன் தனிமங்களின் பெயர்களை வரைபடக் குறியீடு மூலம் குறிப்பிட முயன்றார்?
A. 1806
B. 1807
C. 1808
D. 1813
Answer
C. 1808
66. கீழ்க்கண்ட எந்தத் தனிமம் மனித உடலில் அதிகமாகக் காணப்படுகிறது?
A. ஆக்சிஜன்
B. கால்சியம்
C. பாஸ்பரஸ்
D. கார்பன்
Answer
A. ஆக்சிஜன்
67. பின்வரும் தனிமங்களின் கனிம பரிசோதனைக் கருவியில் பயன்படுத்தபடுகின்ற தனிமம் எது?
A. ருபீடியம்
B. அமெர்சியம்
C. நோபேலியம்
D. கலிபோர்னியம்
Answer
D. கலிபோர்னியம்
68. துணித் தொழிற்சாலைகளில் பருத்தி மற்றும் லினன் துணிகளை வெளுக்கப் பயன்படும் சேர்மத்தைத் தேர்ந்தெடுக்கவும்
A. CaO
B. CaOCl2
C. Ca(OH)2
D. CaCl2
Answer
B. CaOCl2
69. கீழ்க்கண்டவற்றுள் உலகிலேயே மிகவும் லேசான சேர்மம் எது?
A. டைமண்ட்
B. கிராஃபைட்
C. கிராஃபீன்
D. ஃபுல்லரீன்
Answer
C. கிராஃபீன்
70. கீழ்க்கண்டவற்றுள் நைட்ரஜன் உரங்களைத் தேர்ந்தெடு.
A. யூரியா மற்றும் நைட்ரஜன் பாஸ்பேட்
B. அம்மோனியம் நைட்ரேட் மற்றும் யூரியா
C. அம்மோனியம் சல்பேட்
D. B மற்றும் C ஆகிய இரண்டும்
Answer
D. B மற்றும் C ஆகிய இரண்டும்
71. PVC-யுடன் சேர்க்கப்படும் கன உலோகங்களைத் தேர்ந்தெடு?
A. அலுமினியம் மற்றும் காரீயம்
B. காரீயம் மற்றும் குரோமியம்
C. காட்மியம் மற்றும் காரீயம்
D. காட்மியம் மற்றும் பாதரசம்
Answer
C. காட்மியம் மற்றும் காரீயம்
72. 0.2% பீனால் கரைசல் எதற்கு பயன்படுத்தப்படுகிறது?
A. புரைத்தடுப்பான்
B. கிருமி நாசினி
C. எதிர் நுண்ணுயிரி
D. மலேரியா நிவாரணி
Answer
A. புரைத்தடுப்பான்
73. கீழ்க்கண்ட எந்தச் சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவை?
A. ஈதல் சகபிணைப்பு சேர்மங்கள்
B. சகபிணைப்பு சேர்மங்கள்
C. அயனிச் சேர்மங்கள்
D. A மற்றும் C இரண்டும்
Answer
C. அயனிச் சேர்மங்கள்
74. கீழ்க்கண்டவற்றுள் போர் உலோகங்கள் எவை?
A. மாங்கனீசு மற்றும் அலுமினியம்
B. மாங்கனீசு மற்றும் ஜிர்கோனியம்
C. டைட்டானியம் மற்றும் குரோமியம்
D. B மற்றும் C இரண்டும்
Answer
D. B மற்றும் C இரண்டும்
75. நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறத்தைத் தேர்ந்தெடு?
A. நீலம்
B. பச்சை
C. வெள்ளை
D. மஞ்சள்
Answer
A. நீலம்
76. மோனல் என்பது எதன் உலோகக் கலவை
A. அலுமினியம்
B. டைட்டானியம்
C. நிக்கல்
D. கோபால்ட்
Answer
C. நிக்கல்
77. 22 காரட் தங்க ஆபரணத்தில் உள்ள தங்கத்தின் சதவீதம் என்ன?
A. 91.67%
B. 75%
C. 67.91%
D. 96.17%
Answer
A. 91.67%
78. அதிகமாக வினைபுரியும் உலோகம் மற்றும் அலோகம்
A. லித்தியம் மற்றும் புளுரின்
B. சீசியம் மற்றும் புளுரின்
C. கால்சியம் மற்றும் ஆக்ஸிஜன்
D. சோடியம் மற்றும் லித்தியம்
Answer
B. சீசியம் மற்றும் புளுரின்
79. இயற்கைக் கதிரியக்கத் தனிமத்தின் அணு எண்
A. 82ஐ விட அதிகம்
B. 82ஐ வி்ட குறைவு
C. வரையறுக்கப்படவில்லை
D. குறைந்தது 92
Answer
A. 82ஐ விட அதிகம்
80. கச்சா பெட்ரோலியம் பின்னக் காய்ச்சி வடிக்கும்போது, சேகரிக்கப்படும் பகுதிபொருட்களின் வரிசையானது
A. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பாரபின் மெழுகு
B. பெட்ரோல், பிட்டுமன், உயவு எண்ணெய், டீசல்
C. பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல், உயவு எண்ணெய்
D. டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், எரிபொருள் எண்ணெய்
Answer
C. பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல், உயவு எண்ணெய்
81. அமோனியாவுடன் அடர்வெண்புகையைக் கொடுக்கும் வாயு
A. ஹைட்ரஜன் குளோரைடு
B. ஹைட்ரஜன் சல்பைடு
C. ஹைட்ரஜன் அயோடைடு
D. ஹைட்ரஜன் ஃப்ளுரைடு
Answer
A. ஹைட்ரஜன் குளோரைடு
82. பேட்ரோலிய வேதிப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுவது
A. செயற்கை இழைகள்
B. பூச்சிக் கொல்லிள்
C. நெகிழிகள்
D. அனைத்தும்
Answer
D. அனைத்தும்
83. ஏரி சாராயத்தில் உள்ளது?
A. 95% மெத்தனால், 5% நீர்
B. 95% எத்தனால், 5% நீர்
C. 15% எத்தனால், 95% நீர்
D. 50% எத்தனால், 50% நீர்
Answer
B. 95% எத்தனால், 5% நீர்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்