வேர்ச்சொல்லைக் கொண்டு – வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் ஆகியவற்றைக் கண்டறிதல் வினா விடைகள்

1. வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக - 'பகு'
A. பகுத்தார்
B. பகுத்தவர்
C. பகுத்த
D. பகுத்து
Answer
A. பகுத்தார்
2. கீழ்க்கண்டவற்றில் எது வினையெச்சம் அன்று?
A. கூறி
B. கூறிய
C. கண்டு
D. பெற்று
Answer
B. கூறிய
3. 'எடு' என்ற வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
A. எடுத்தவன்
B. எடுத்த
C. எடுத்து
D. எடுத்தது
Answer
A. எடுத்தவன்
4. 'கட்டு' என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் தேர்க
A. கட்டல்
B. காட்டல்
C. கட்டுவான்
D. கட்டினான்
Answer
A. கட்டல்
5. கீழ்க்கண்டவற்றில் எது வினையாலணையும் பெயர் அல்லாதது எது?
A. எழுதியவர்
B. இசைந்தவர்
C. பொறுத்தார்
D. பிழைத்தவர்
Answer
C. பொறுத்தார்
குறிப்பு : பொறுத்தார் – வினைமுற்று, பொறுத்தவர் – வினையாலணையும் பெயர்
6. 'தொழு' என்ற வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக.
A. தொழுது
B. தொழுகை
C. தொழுத
D. தொழுதான்
Answer
A. தொழுது
7. 'வில்' இச்சொல்லின் தொழிர்பெயரைத் தேர்க
A. விற்றான்
B. வில்லான்
C. விற்று
D. விற்றல்
Answer
D. விற்றல்
8. வேர்ச்சொல்லை தொழிர்பெயராக்குக - 'வை'
A. வைத்தார்
B. வைப்பாள்
C. வைகிறான்
D. வைத்தல்
Answer
D. வைத்தல்
9. கீழ்க்கண்டவற்றில் தவறான இணையைத் தேர்க
A. தேர்ந்தார் – வினைமுற்று
B. தேர்ந்த – வினையெச்சம்
C. தேர்ந்தவர் – வினையாலணையும் பெயர்
D. தேர்தல் - தொழிற்பெயர்
Answer
B. தேர்ந்த – வினையெச்சம்
குறிப்பு : தேர்ந்த – பெயரெச்சம், தேர்ந்து – வினையெச்சம்
10. 'எழுது' என்ற வேர்ச்சொல்லின்வினைமுற்றைத் தேர்க
A. எழுதினார்
B. எழுதிய
C. எழுந்தது
D. எழுதி
Answer
A. எழுதினார்
11. 'செல்' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்க
A. செல்லும்
B. சென்ற
C. செல்லா
D. சென்றவன்
Answer
D. சென்றவன்
12. பொருத்துக
a. பொறுத்தல் 1. வினையெச்சம்
b. பொறுத்தவர் 2. வினைமுற்று
c. பொறுத்தார் 3. வினையாலணையும் பெயர்
d. பொறுத்து 4. தொழிற்பெயர்
a
b
c
d
A.
4
3
2
1
B.
3
2
1
4
C.
2
1
4
3
D.
1
4
3
2
Answer
A. 4 3 2 1
குறிப்பு : பொறு – வேர்ச்சொல், பொறுத்த – தெரிநிலை பெயரெச்சம்
13. கீழ்க்கண்டவற்றில் எது வேர்ச்சொல் அன்று?
A. வா
B. கல்
C. இசை
D. நல்கி
Answer
D. நல்கி
குறிப்பு : நல்கி – வினையெச்சம், நல்கு – வேர்ச்சொல்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்