பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் - வினா விடைகள்

1. "வேன்மிகு தானை வேந்தர்க்கு கடனே" தானை என்ற சொல்லின் பொருள் யாது?
A. படை
B. மக்கள்
C. பண்பு
D. செல்வம்
Answer
A. படை
2. 'தூற்றின்கண் தூவிய வித்து' இவ்வடிவில் புதிர் என்னும் பொருள் தரும் சொல் எது?
A. வித்து
B. தூறு
C. கண்
D. தூவி
Answer
B. தூறு
3. கொழுநன் - பொருத்தமான பொருளை தருக
A. தலைவன்
B. தம்பி
C. எமன்
D. கணவன்
Answer
D. கணவன்
4. இடுக்கண் - பொருத்தமான பொருளை தருக
A. தழுவி
B. நகரம்
C. கடற்கரை
D. துன்பம்
Answer
D. துன்பம்
5. திரிபு - பொருத்தமான பொருளை தருக
A. செல்வம்
B. அடையாளம்
C. எமன்
D. மாற்றம்
Answer
D. மாற்றம்
6. ஞாலம் - பொருத்தமான பொருளை தருக
A. உலகம்
B. நட்பு
C. செல்வம்
D. சிறப்பு
Answer
A. உலகம்
7. கார்குலாம் - பொருத்தமான பொருளை தருக
A. வரிசை
B. அறிவு
C. இங்கு
D. மேகக்கூட்டம்
Answer
D. மேகக்கூட்டம்
8. மௌலி - பொருத்தமான பொருளை தருக
A. குளம்
B. சடை
C. வானம்
D. மணிமுடி
Answer
D. மணிமுடி
9. விழுப்பம் - பொருத்தமான பொருளை தருக
A. சேறு
B. கருப்பு
C. மயக்கம்
D. பெருமை
Answer
D. பெருமை
10. சித்தம் - பொருத்தமான பொருளை தருக
A. பள்ளம்
B. மேடு
C. தியாகம்
D. அறிவு
Answer
D. அறிவு
11.தென்புலம் - பொருத்தமான பொருளை தருக
A. தென்னாடு
B. ஆதாரம்
C. போர்
D. வழி
Answer
A. தென்னாடு
12. முகில் - பொருத்தமான பொருளை தருக
A. வீரன்
B. மேகம்
C. அழகு
D. குழந்தை
Answer
B. மேகம்
13. பூதரம் - பொருத்தமான பொருளை தருக
A. தலைவன்
B. மலை
C. கண்கள்
D. படகு
Answer
B. மலை
14. பரவை - பொருத்தமான பொருளை தருக
A. அரசன்
B. பாதுகாப்பு
C. கடல்
D. உறுதி
Answer
C. கடல்
15. வதுவை - பொருத்தமான பொருளை தருக
A. பேரொளி
B. திருமணம்
C. கடல்
D. வில்
Answer
B. திருமணம்
16. எழில் - பொருத்தமான பொருளை தருக
A. தேவர்
B. அழகு
C. கடந்தவர்
D. வீரம்
Answer
B. அழகு
17. கனலி - பொருத்தமான பொருளை தருக
A. மீன்
B. சூரியன்
C. பாதுகாப்பு
D. கருணை
Answer
B. சூரியன்
18. வேய் - பொருத்தமான பொருளை தருக
A. இன்பம்
B. மாறுபாடு
C. சோம்பல்
D. மூங்கில்
Answer
D. மூங்கில்
19. நற்றிறம் - பொருத்தமான பொருளை தருக
A. அறநெறி
B. மலை
C. பறவை
D. கொல்லுதல்
Answer
A. அறநெறி
20. உழுவை - பொருத்தமான பொருளை தருக
A. கரடி
B. தந்தம்
C. புலி
D. மான்
Answer
C. புலி
21.எண்கு - பொருத்தமான பொருளை தருக
A. கரடி
B. எருமை
C. காடு
D. மான்
Answer
A. கரடி
22.தொடை - பொருத்தமான பொருளை தருக
A. பெண் யானை
B. மாலை
C. தேனீ
D. தேன்
Answer
B. மாலை
23. மடங்கல் - பொருத்தமான பொருளை தருக
A. துன்பம்
B. முத்து
C. சிங்கம்
D. தலை
Answer
C. சிங்கம்
24. மிசை - பொருத்தமான பொருளை தருக
A. மீட்சி
B. மேல்
C. உலகம்
D. மகிழ்ச்சி
Answer
B. மேல்
25. சங்கமம் - பொருத்தமான பொருளை தருக
A. விருப்பம்
B. கூடல்
C. பசு
D. வேனில்
Answer
B. கூடல்
26. பேதைமை - பொருத்தமான பொருளை தருக
A. வலிமை
B. வறுமை
C. தளராமை
D. அறிவின்மை
Answer
D. அறிவின்மை
27. களிறு - பொருத்தமான பொருளை தருக
A. யானை
B. மொட்டு
C. தாய் தந்தை
D. கோபம்
Answer
A. யானை
28. பேதை - பொருத்தமான பொருளை தருக
A. நிறைய
B. செல்வம்
C. பெண்
D. பாக்கு
Answer
C. பெண்
29.ஆகடியம் - பொருத்தமான பொருளை தருக
A. மான்
B. நாய்
C. ஏளனம்
D. புற்று
Answer
C. ஏளனம்
30.சுரும்பு - பொருத்தமான பொருளை தருக
A. தேவர்
B. வண்டு
C. உலகம்
D. செல்வம்
Answer
B. வண்டு
31.யாக்கை - பொருத்தமான பொருளை தருக
A. வீடு
B. விளங்கு
C. உடல்
D. பகைவர்
Answer
C. உடல்
32. கனல - பொருத்தமான பொருளை தருக்
A. சுவை
B. ஆற்றல்
C. நெருப்பு
D. உள்நாட்டவர்
Answer
D. நெருப்பு
33.அகம் - பொருத்தமான பொருளை தருக
A. மக்கள்
B. மனம்
C. இரத்தம்
D. முதுமை
Answer
B. மனம்
34.அழல் - பொருத்தமான பொருளை தருக
A. தாமதம்
B. வயது
C. விலங்கு
D. நெருப்பு
Answer
D. நெருப்பு
35.வேட்கை - பொருத்தமான பொருளை தருக
A. மான்
B. வளம்
C. விருப்பம்
D. அகப்பை
Answer
C. விருப்பம்
36.திரவியம் - பொருத்தமான பொருளை தருக
A. தந்தை
B. இருள்
C. படகு
D. செல்வம்
Answer
D. செல்வம்
37.சனம் - பொருத்தமான பொருளை தருக
A. குற்றம்
B. அழகு
C. மக்கள்
D. மாலை
Answer
C. மக்கள்
38.நாவாய் - பொருத்தமான பொருளை தருக
A. மேகம்
B. படகு
C. உலகு
D. நட்சத்திரம்
Answer
B. படகு
39.பகழி - பொருத்தமான பொருளை தருக
A. அம்பு
B. சந்திரன்
C. சிரிப்பு
D. நீர்
Answer
A. அம்பு
40. மகிஷம் - பொருத்தமான பொருளை தருக
A. காளை
B. யானை
C. குதிரை
D. எருமை
Answer
D. எருமை
41.ஒட்பம் - பொருத்தமான பொருளை தருக
A. நிறைபண்பு
B. அழியும்
C. அறிவுடைமை
D. துன்பம்
Answer
C. அறிவுடைமை
42.விழைவு - பொருத்தமான பொருளை தருக
A. விருப்பம்
B. சோர்வு
C. மகிழ்ச்சி
D. தேவலோகம்
Answer
A. விருப்பம்
43. பொதும்பு - பொருத்தமான பொருளை தருக
A. சோலை
B. வலிமை
C. பழி
D. கப்பல்
Answer
A. சோலை
44.நடலை - பொருத்தமான பொருளை தருக
A. அறிவு
B. வறுமை
C. உயர்வு
D. வஞ்சனை
Answer
D. வஞ்சனை
45.பல்லவம் - பொருத்தமான பொருளை தருக
A. தளிர்
B. யானை
C. மலை
D. நட்பு
Answer
A. தளிர்
46. மாருதம் - பொருத்தமான பொருளை தருக
A. குதிரை
B. ஆகாயம்
C. காற்று
D. பக்கம்
Answer
C. காற்று
47. களஞ்சியம் - பொருத்தமான பொருளை தருக
A. முதலீடு
B. பழமை
C. தொகுப்பு
D. உள்ளம்
Answer
C. தொகுப்பு
48. நுதல் - பொருத்தமான பொருளை தருக
A. நெற்றி
B. தெய்வம்
C. மலை
D. வாழை
Answer
A. நெற்றி
49.மாரன் - பொருத்தமான பொருளை தருக
A. மேகம்
B. வெற்றி
C. அறிவுடையோர்
D. மன்மதன்
Answer
D. மன்மதன்
50. குறிஞ்சி
A. காடு
B. மலை
C. கடல்
D. வயல்
Answer
B. மலை
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்